சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடுத்த ஷாக்.. ருசி தெரியலயா.. வாசனை தெரியலயா.. அப்படீன்னா கொரோனா இருக்கலாம்.. யுகே டாக்டர்கள் தகவல்

கொரோனா வைரஸ் குறித்த புதிய அறிகுறிகள் வெளியாகி உள்ளன

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேபோவது போல, கொரோனா வைரஸ் பற்றின தகவல்களும் தினம் தினம் புதுசு புதுசாக வெளிவருகிறது.

எத்தனையோ கொள்ளை நோய்களை உலகம் கண்டிருக்கிறது.. அவைகளை திறமை, புத்திசாலித்தனம், அர்ப்பணிப்புகளால் மருந்துகளை கண்டுபிடித்து அறிவியல் அறிஞர்கள் வென்றிருக்கிறார்கள்.. ஆனால் இந்த கொரோனா வித்தியாசமானது!!

பெரிய பெரிய நாடுகளே, பொருளாதாரத்தில் செழித்து கொழிக்கும் நாடுகளே விழித்து கொண்டிருக்கின்றன.. இது எந்த மாதிரியான வைரஸ் என்பது குறித்த ஆய்வுகளே இன்னும் நடந்து முடியவில்லை.. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல் வருகின்றன!

கொரோனா வைரஸ்... தமிழகம் முழுவதும் மாவட்ட வாரிய கண்காணிப்பில் உள்ளவர்கள் விவரம்.. இதோ முழு லிஸ்ட! கொரோனா வைரஸ்... தமிழகம் முழுவதும் மாவட்ட வாரிய கண்காணிப்பில் உள்ளவர்கள் விவரம்.. இதோ முழு லிஸ்ட!

ஆய்வு

ஆய்வு

அந்த வகையில், புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.. இப்போதைக்கு காய்ச்சல் இருமல், சளி, தலைவலி, போன்றவை மட்டுமே கொரோனா அறிகுறிகள் என்று சொல்லப்பட்டுள்ளன.. ஆனால், ஐரோப்பாவில் உள்ள ஈஎன்டி அதாவது காது-மூக்கு-தொண்டை மருத்துவ நிபுணர்கள் கொரோனாவுக்கான புதிய அறிகுறி ஒன்றை சொல்கிறார்கள்.

தொற்று

தொற்று

நமக்கு திடீரென வாசனையை உணர முடியாமல் போய்விட்டாலோ, வாசனை உணரும் திறனில் இயலாமை என்று உணர்ந்தாலோ அதுவும் தொற்றுதான் என்று அவர்கள் சொல்கிறார்களாம். அவர்களுக்கு வைரஸ் மறைமுகத் தொற்றாக இருக்கலாம் என்று இவர்கள் சொல்வதாக தகவல்கள் கூறுகின்றன. மற்ற அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் இந்த அறிகுறி ஒன்று போதும் என்பது அவர்களின் கூற்று. மேலும் இது பிரதான அறிகுறி என்றும் அவர்கள் சொல்வதாக தகவல்கள் கூறுகின்றன.

டாக்டர்கள்

டாக்டர்கள்

அதேபோல நாக்கில் ருசி தன்மை குறைந்துவிட்டாலும் இந்த அறிகுறி இருப்பதாக பொருளாம்.. வாசனை வராவிட்டாலும், ருசி தன்மை தன்மை குறைந்துவிட்டாலும் கொரோனா அறிகுறி என்பது அவர்கள் சொல்லும் கருத்து.. ஆனால் இதுவரை இது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இது சம்பந்தமாக பிரிட்டிஷ் டாக்டர்கள் சொல்லும்போது, "நோய்த் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 30 சதவீதம் பேருக்கு வாசனையை உணரும் தன்மை இல்லை என்பதுதான் முக்கிய அறிகுறியாக இருந்தது.

அறிவுரை

அறிவுரை

வழக்கமாக கொரோனாவுக்கு சொல்லப்படும் மற்ற அறிகுறிகள் எதுவுமே அவர்களுக்கு இல்லை.. வாசனையை உணரும் தன்மை குறைதல், சுவை குறைதல் இந்த 2தான் பிரதான அறிகுறிகள்.. காரணம், இந்த வைரஸ் மூக்கின்வழி பரவக் கூடியது" என்கிறார்கள். இப்படி யாருக்காவது ருசி தெரியவில்லை என்றாலோ, வாசனையை நுகரமுடியவில்லை என்றாலோ அவர்களாகவே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்கிறார்கள்.. இருந்தாலும் இந்திய டாக்டர்களோ அல்லது இந்திய அரசோ இதுகுறித்து இதுவரை எதையும் சொல்லவில்லை என்பதால் மக்கள் இதுகுறித்து பீதி அடைய தேவையில்லை என்பது நமது அறிவுரையாகும்.

English summary
Coronavirus: new symptoms of corona virus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X