தமிழக அமைச்சர் துரைக்கண்ணு கொரோனா தொற்று பாதிப்பால் கவலைக்கிடம்- தீவிர சிகிச்சை: மருத்துவமனை அறிக்கை
சென்னை: தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு கொரோனா தொற்று உறுதியானதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் கடந்த 13-ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக அமைச்சர் துரைக்கண்ணு (72) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதியானது.

அவருக்கு ஏராளமான துணை நோய்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்ததில் அவரது நுரையீரலில் 90 சதவீதம் பாதிப்புள்ளது. அவர் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு எக்மோ, செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி விஜயபாஸ்கர் வந்திருந்தனர் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் இறந்த தகவலை அறிந்து அவரிடம் நலம் விசாரிப்பதற்காக அமைச்சர் துரைக்கண்ணு கடந்த 13-ஆம் தேதி காலை சென்னையிலிருந்து சேலத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
காலை 10 மணி அளவில் திண்டிவனம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவருக்கு மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்து சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருக்கு இன்று எக்மோ கருவி பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications