சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ்.. தேவையில்லாமல் பீதி அடைய வேண்டாம்.. உண்மை என்ன.. எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா வைரஸ் குறித்து தேவையில்லாமல் மக்கள் பீதி அடைய வேண்டாம். சுய சுத்தத்தை பராமரிப்பது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அளவுக்கு சத்தான உணவுகளை சாப்பிடுவது உள்ளிட்டவைகளை செய்தாலே பாதிப்பு பெரிதாக ஏற்படாது என்கிறார்கள்.

Recommended Video

    கொரோனா வைரஸும்... தேவையற்ற வதந்திகளும்

    சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கி சுமார் 4000 பேர் உலகம் முழுதும் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மூச்சு காற்றின் வழியாக மற்றவர்களுக்கு பரவுகிறது. அதாவது இருமல், சளி, தும்மல் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் வாயில் அல்லது மூக்கில் கைவைத்துவிட்டு அதை எங்கு அவர் தொட்டாலும், அந்த இடத்தில் கொரோனா கிருமி இருக்கும். அந்த இடத்தை தொட்டுவிட்டு கண், வாய் அல்லது மூக்கை தொட்டால் அவருக்கும் கொரோனா பரவும்.

    எனவே கொரோனா வைரஸ் வராமல் இருக்க சுய சுத்தம் நிச்சயம் அவசியம். சோப்பு போட்ட கையை நன்றாக கழுவாமல் உங்கள் மூக்கு , வாய், கண் பகுதியை தொட வேண்டாம். அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவது நல்லது. அதேபோல் கைகொடுக்காமல், ஒருவரிடம் குறைந்த பட்சம் மூன்று அடி தள்ளி நின்றே பேசுவது மிகவும் நல்லது.

    பரவும் கொரோனா.. கேரளாவில் 15.. புனேவில் 2.. கர்நாடகாவில் 4.. இந்தியாவில் 55 பேருக்கு வைரஸ் பாதிப்பு!பரவும் கொரோனா.. கேரளாவில் 15.. புனேவில் 2.. கர்நாடகாவில் 4.. இந்தியாவில் 55 பேருக்கு வைரஸ் பாதிப்பு!

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆங்கில மருத்துவத்தைப் பொருத்தவரை, இதைக் காய்ச்சலுக்கான மருந்துகளைக் கொண்டு சரி செய்ய மருத்துவர்கள் முயல்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் தருணத்தில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அன்டி - பயோடிக் மருந்துகள் அளிக்கப்படுகிறது.. நீர் இழப்பைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது..

    பீதி அடைய வேண்டாம்

    பீதி அடைய வேண்டாம்

    அடுத்ததாக மூச்சுத் திணறல் ஏற்பட்டால், ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது அதற்கும் மேலே சென்றால் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்படுகிறது. இவற்றை வைத்து ஒருவாரம் வரை சமாளித்துவிட்டால், உடல் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறும். கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடும். நோய் பாதித்தவர்களில் நூற்றில் 5 பேர் மட்டுமே மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டியவர்கள் ஆவர். அதில் 2 பேருக்கு மட்டுமே நிலைமை மோசமாகும். ஆகவே பொதுமக்கள் தேவையில்லாத பீதியடைய வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    உயிர்வாழ்வது குறையும்

    உயிர்வாழ்வது குறையும்

    வெயில் அதிகமாக இடத்தில் கொரோனா கிருமி உயிர்வாழும் கால அளவு குறைவாகவே இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது இயற்கையான வெளிச்சம் இருக்கக்கூடிய இடங்களில் அதன் கால அளவு குறைவாக இருக்குமாம். குளிர்ச்சியான இடங்களில், மூடப்பட்ட இடங்களில் இந்தக் கிருமி உயிர் வாழக்கூடிய கால அளவு அதிகமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், வெயில் காலத்தில், வெயில் அடிக்கும் நாட்டில் இந்தக் கிருமி பரவாது என்று நம்பக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    பூண்டு சாப்பிட்டால்

    பூண்டு சாப்பிட்டால்

    பூண்டு சாப்பிடுவதலோ, அடிக்கடி வாயை கொப்பளிப்பது, சின்ன வெங்காயம் சாப்பிடுவது, மூக்கில் நல்லெண்ணெய் வைப்பது உள்ளிட்டவை கொரோனாவை எந்த வகையிலும் தடுக்காது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சளி இருமல், உள்ளவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க மாஸ்க் அணியலாம். மற்றபடி மாஸ்க் அணிவதால் கொரோனா பரவாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கண்கள் வழியாகவும் கொரோனா பரவும் என்பதால் முகமூடிகளை அணிந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விலங்குள் மூலமாக பரவும் என்பதும் முற்றிலும் பொய். கோழிகள் மூலம் பரவுவதாக வரவும் தகலும் உண்மை இல்லை.

    English summary
    coronavirus prevention methods : how did get treatment in hospital
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X