சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பு.. இந்த வேகம் முக்கியம்.. இப்படியே போனால் தமிழகம் சீக்கிரம் மீளும்.. ஒரு குட் நியூஸ்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் கடந்த சில நாட்களாக வேகமாக குணமடைந்து வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை; தமிழகத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் பலர் கடந்த சில நாட்களாக வேகமாக குணமடைந்து வருகிறார்கள்.

Recommended Video

    குணமடைந்த 14 பேர்... ஒரே நாளில் நடந்த நல்ல மாற்றங்கள்

    இந்தியா முழுக்க கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்தியா முழுக்க மொத்தமாக 13,454 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். 448 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளார். தமிழ்கத்தில் 1267 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதுவரை தமிழகத்தில் 180 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மீதம் உள்ள 1,072 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா காரணமாக தமிழகம் முழுக்க 15 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகம் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு விடும் என்று நம்பிக்கை உள்ளது.

    இதுவரை இல்லாத அளவு.. திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. அதிர்ச்சியில் கர்நாடகா இதுவரை இல்லாத அளவு.. திடீரென அதிகரித்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை.. அதிர்ச்சியில் கர்நாடகா

    குறைவாக இருந்தது

    குறைவாக இருந்தது

    தொடக்க காலத்தில் தமிழகத்தில் குணப்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. அதாவது தினமும் நோயாளிகளின் எண்ணிக்கை 100 மற்றும் 150 என்று உயரும். ஆனால் குணப்படுத்தப்படும் மக்களின் எண்ணிக்கை 10ஐ கூட தாண்டாது. இதனால் தமிழகத்தில் ஆக்ட்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆனால் டிஸ்சார்ஜ் செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.

    நிறைய பேர் குணமடைந்தார்

    நிறைய பேர் குணமடைந்தார்

    இந்த நிலையில்தான் கடந்த 5 நாட்களாக தினமும் நிறைய பேர் தமிழகத்தில் குணமடைந்து வருகிறது. சென்ற வாரம் ஒரு நாளுக்கு 5 பேர் வீதம் சராசரியாக தமிழகத்தில் குணமடைந்தார். தற்போது இந்த வாரம் கடந்த 6 நாட்களாக தினமும் சராசரியாக 25 பேர் குணமடைகிறார்கள். சில நாட்கள் ஒரே நாளில் 36 பேர் கூட தமிழகத்தில் குணமடைகிறார்கள்.

    தமிழகம் முன்னேற்றம்

    தமிழகம் முன்னேற்றம்

    அதிலும் கடந்த மூன்று நாட்களில் புதிதாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை மொத்தமாக குறைந்து, அப்படியே டிஸ்சார்ஜ் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுதான் கொரோனா போராட்டத்தில் மிக முக்கியமான வெற்றியாகும். எப்போது ஒரு இடத்தில் புதிதாக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கிறதோ அப்போது அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம்.

    கேரளாவில் இதே நிலை

    கேரளாவில் இதே நிலை

    கேரளாவில் இப்படித்தான் தொடக்க காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆனால் போக போக அந்த மாநிலம் புதிய நோயாளிகள் ஏற்படாமல் கட்டுப்படுத்தியது. அதே சமயம் இன்னொரு பக்கம் ஆக்ட்டிவ் நோயாளிகளுக்கு உடனே உடனே சிகிச்சை அளித்து குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பியது. இதன் மூலம் கேரளாவில் 394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 147 பேர் மட்டும் மருத்துவமனையில் இருக்கிறார்கள். 245 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழகத்திற்கு நல்ல செய்தி

    தமிழகத்திற்கு நல்ல செய்தி

    தமிழகத்தில் கடந்த 5 நாட்களாக இப்படி குணமடையும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குணமடையும் நபர்களின் சதவிகிதம் 6.2% இருந்து 14% ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவில் குணமடையும் சதவிகிதம் அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழகம் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதில் கேரளா 62% குணமடையும் சதவிகிதம் கொண்டுள்ளது.

    சதவிகிதம் என்ன?

    சதவிகிதம் என்ன?

    கேரளாவிற்கு அடுத்து தெலுங்கானா 26% குணமடையும் சதவிகிதம் கொண்டுள்ளது.தமிழகத்தை போலவே ராஜஸ்தானும் 14% குணமடையும் சதவிகிதம் கொண்டுள்ளது. தமிழகம் இதே வேகத்தில் சென்றால் இன்னும் சில நாட்களில் மொத்தமாக கொரோனாவில் இருந்து விடுபடும். தமிழகத்தில் இதே வேகத்தில் ஒரு நாளுக்கு 20-30 பேர் வீதம் குணப்படுத்தப்பட்டால் இன்னும் 1 மாதத்தில் முழுமையாக தமிழகம் கொரோனாவில் இருந்து விடுபடும் என்கிறார்கள்.

    English summary
    Coronavirus: Recovery rate in Tamilnadu increasing day by day, gives a ray of hope in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X