விரைவில் "பீக்கை" எட்ட போகும் கொரோனா.. தமிழ்நாட்டில் என்ன நடக்கும்? கோவிட் ஆய்வாளர் முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கொரோனா டேட்டா ஆய்வாளர் விஜயானந்த் இது தொடர்பாக முக்கிய விவரங்களை வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முதல்நாள் கொரோனா பாதிப்பு 386 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று 401 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளன. தற்போது ஏற்படும் கொரோனா காரணமாக பெரிய அளவில் யாரும் மரணம் அடையவில்லை. தற்போது மிகவும் லேசான கொரோனாவே மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

முக்கியமாக கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை.
இந்த காய்ச்சலுக்கு இடையில் தற்போது மக்களுக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 10 என்ற அளவில் இருந்து தற்போது 250ஐ தாண்டி உள்ளது. XBB.1 மற்றும் XBB.1.15 வைரஸ்கள் சமீபத்தில் உலகம் முழுக்க பல நாடுகளில் பரவியது.
முக்கியமாக சீனாவில் பரவியது. ஆனால் இந்தியாவில் அப்போது பரவில்லை. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதற்கு XBB.1.16 வைரஸ்தான் காரணம் என்று கூறப்படுகிறது.
திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 5880 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. கடந்த 7 மாதங்களில் பதிவான கேஸ்களில் இதுதான் மிக மிக அதிகம் ஆகும்.

இந்தியாவில் ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 5,30,876 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாசிட்டிவ் சதவிகிதம் 3.32 ஆக மாறி உள்ளது. 2.1 சதவிகிதத்தில் இருந்து 3.32 ஆக இது உயர்ந்து உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா காரணமாக 4,47,39,054 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், கொரோனா டேட்டா ஆய்வாளர் விஜயானந்த் இது தொடர்பாக முக்கிய விவரங்களை வெளியிட்டு உள்ளார்.
அதில், தமிழ்நாட்டில் இன்று 401 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன, டெஸ்ட் செய்யப்பட்ட நபர்கள் எண்ணிக்கை 4727. இதன் பாசிட்டிவ் விகிதம் விகிதம் 8.4%. சென்னையில் 110 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதன் பாசிட்டிவ் விகிதம் 9%.
மருத்துவமனையில் கொரோனா காரணமாக அட்மிட் ஆகும் நபர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த Omicron XBB 1.16 வகை கொரோனா மற்ற கொரோனாக்களை விட கடுமையானது அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது.

அம்புக்குறியில் காட்டப்பட்டுள்ளபடி தினசரி கொரோனா புதிய கேஸ்களில் வளர்ச்சி விகிதம் குறையத் தொடங்கியது. (அதாவது கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் விகிதம் குறைந்துள்ளது). எனவே இந்த கொரோனா பரவலின் பீக் நீண்ட தூரத்தில் இல்லை. விரைவில் இதில் பீக் வரப்போகிறது.
தேவைப்பட்டால் மாஸ்க் அணியுங்கள், இந்த கொரோனா பரவல் பற்றி கவலைப்பட எந்த தேவையும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications