இதுவரை இல்லாத உச்சம்.. திணறும் தமிழகம்.. ஒரே நாளில் 827 கொரோனா கேஸ்கள்.. 20 ஆயிரத்தை நெருங்குகிறது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று 827 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19372 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா வேகம் எடுக்க தொடங்கி உள்ளது.நேற்று 817 கொரோனா கேஸ்கள் அதிகமாக பதிவான நிலையில் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரை பதிவான கேஸ்களில் இன்றுதான் தமிழகத்தில் அதிக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் தினமும் 700+ கேஸ்கள் வருகிறது. பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டும் கூட தமிழகத்தில் தொடர்ந்து அதிகமாக கேஸ்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

சென்னை நிலை

சென்னை நிலை

சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 12757 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியது. இன்று தமிழகத்தில் 12 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இதுவரை தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்பட்ட மரணத்தில் இன்றுதான் அதிகமான பலி எண்ணிக்கை பதிவாகி உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. தமிழகத்தில் மொத்தமாக 145 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்தமாக 10548 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். இன்று 639 பேர் தமிழகத்தில் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

தமிழகத்தில் இன்று பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 117 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால்தான் கொரோனா அதிகமாகி வருகிறது. இது பெரிய சவாலான விஷயம். நாங்கள் இதன் மூலம் கொரோனா பரவுவதை முடிந்த அளவு தடுக்க முயன்று வருகிறோம். பிறமாநிலத்தில் இருந்து வந்த 1253 பேருக்கு இதுவரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிரா நிலை

மகாராஷ்டிராவில் இருந்து வந்த 936 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தமிழகம் வரும் முக்கால்வாசி நபருக்கு கொரோனா உள்ளது. ஆனால் முடிந்த அளவு நாங்கள் சோதனைகளை அதிகப்படுத்தி இருக்கிறோம். முடிந்த அளவு கட்டுப்பாட்டு பணிகளை செய்து வருகிறோம். எங்களால் முடிந்த அளவு பணிகளை செய்கிறோம், என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+