இதுவரை இல்லாத உச்சம்.. தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா.. அதிர வைத்த ரெக்கார்ட்!
சென்னை: தமிழகத்தில் இன்று மட்டும் 938 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கைக்கு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது
தமிழகத்தில் எப்போதும் போல் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்றுதான் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. கடந்த 10 நாட்களாகவே தமிழகத்தில் அதிக அளவில் கேஸ்கள் பதிவாகி வருகிறது.
21184 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று இத்தனை பேருக்கு கொரோனா ஏற்பட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை நிலை
சென்னையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் 616 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 13980 பேர் சென்னையில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இப்படி கொரோனா பாதித்த யாரும் வெளிமாநிலத்தை சேர்ந்த நபர்கள் இல்லை. யாரும் வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருந்து சென்னை வந்த யாருக்கும் கொரோனா இல்லை.

எத்தனை சோதனை
தமிழகத்தில் 12039 பேருக்கு இன்று கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 457233 பேருக்கு தமிழகத்தில் கொரோனா சோதனை இதுவரை செய்யப்பட்டுள்ளது. இதுதான் அதிகமான கேஸ்கள் இன்று வர காரணம் என்று கூறுகிறார்கள். முக்கியமாக வெளி மாநிலத்தில் இருந்து வந்த பலருக்கு இன்று தமிழகத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

வெளிமாநிலம் நிலை
தமிழகத்திற்கு வெளிமாநிலத்தில் இருந்து வந்த 82 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 6 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் 160 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இன்று பலி எண்ணிக்கை கொஞ்சம் குறைந்துள்ளது. அதே சமயம் இன்று 40 வயதுக்கும் குறைவான 2 பேர் தமிழகத்தில் பலியானது அதிர்ச்சி அளிக்கிறது.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
தமிழகத்தில் இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 9026 ஆக உள்ளது . தமிழகத்தில் மொத்தமாக 12 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் இப்படி வரிசையாக மக்கள் குணமாகி வருவது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications