73 கொரோனா கேஸ்கள்.. எப்படி வந்தது என்றே தெரியவில்லை.. பெரும் குழப்பத்தில் தமிழக அதிகாரிகள்.. பின்னணி
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு எப்படி கொரோனா ஏற்படுகிறது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களுக்கு எப்படி கொரோனா ஏற்படுகிறது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது பெரிய சிக்கலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. அதே சமயம் இன்னொரு பக்கம் தமிழகத்தில் குணப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாதி பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 114 பேர் தமிழகத்தில் குணப்படுத்தப்பட்டுள்ளனர்
மொத்தம் 866 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது.

நிலை மோசம்
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்படும் கொரோனா கேஸ்கள் எப்படி ஏற்படுகிறது என்றே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் அவரின் காண்டாக்ட் டிரேஸ் செய்யப்படும். அப்படி செய்யப்படும் நிலையில் அவருக்கு எப்படி யார் மூலம் கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியும். யார் அவர்களுக்கு கொரோனாவை பரப்பியது என்று கண்டுபிடிக்க முடியும்.

ஆனால் தமிழகத்தின் நிலை
ஆனால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா ஏற்பட்ட பலருக்கு யார் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்றே தெரியவில்லை. ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த நபர்களுக்கு கூட கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடு, வெளி மாநிலம் எங்குமே செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு எப்படி கொரோனா பரவியது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

எத்தனை கேஸ்கள்
அதன்படி நேற்று முதல் நாள் தமிழகத்தில் கொரோனா ஏற்பட்ட 54 பேரில் 17 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்படி சென்னையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் வந்தது தொடர்பாக காண்டாக்ட் டிரேஸ் செய்ய முடியவில்லை. சேலத்தில் நான்கு பேர், மதுரையில் இரண்டு பேர் செங்கல்பட்டு, தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

நேற்று வந்த கேஸ்கள்
அதேபோல் நேற்று தமிழகத்தில் வந்த கேஸ்களும் இப்படித்தான். நேற்று சென்னையில் 9 பேருக்கு கொரோனா எப்படி வந்தது என்றே தெரியவில்லை. ராமநாதபுரத்தில் 2 பேருக்கு கொரோனா ஹிஸ்டரி கண்டுபிடிக்க முடியவில்லை. காஞ்சிபுரம், திருவள்ளூரில் தலா ஒருவருக்கு எப்படி கொரோனா வந்தது என தெரியவில்லை. மொத்தம் நேற்று தமிழகத்தில் கொரோனா ஏற்பட்ட 13 பேருக்கு எப்படி கொரோனா வந்தது என்றே தெரியவில்லை.

விசாரணை செய்கிறார்கள்
இதன் மூலம் கடந்த 7 நாட்களில் மொத்தம் 73 கேஸ்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்களின் காண்டாக்ட் ஹிஸ்டரி மிக தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒருவேளை இது ஸ்டேஜ் 3 பரவலை ஏற்படுத்தி இருக்குமா? சமூகத்தில் கொரோனா பரவி இருக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. இவர்கள் தொடர்பு கொண்ட எல்லா நபர்களும் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications