3 மாதங்கள் ஆகிவிட்டது.. இன்னும் பதில் கிடைக்காத அந்த ஒரு கேள்வி.. மர்மம் விலகாத கொரோனா வைரஸ்!
கொரோனா வைரஸ் உருவாகி 3 மாதங்களாக பரவி வரும் நிலையில் அந்த தொடர்பாக சுற்றி சுழலும் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. சென்னை: கொரோனா வைரஸ் உருவாகி 3 மாதங்களாக பரவி வரும் நிலையில்
சென்னை: கொரோனா வைரஸ் உருவாகி 3 மாதங்களாக பரவி வரும் நிலையில் அந்த தொடர்பாக சுற்றி சுழலும் முக்கியமான கேள்வி ஒன்றுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
Recommended Video
கொரோனா வைரஸ் குறித்த சர்ச்சைகள் குறித்து தெரிந்து கொள்ளும் முன் அந்த வைரஸின் பூர்வீகம் குறித்தும் பரம்பரை குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் என்பது இப்போது உருவானது கிடையாது. கொரோனா வைரஸ் பல வருடங்களுக்கு முன்பே உருவாகிவிட்டது.
கொரோனாவின் குடும்பத்தில் இதுவரை மொத்தம் 6 வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம்தான் சார்ஸ் உள்ளிட்ட நோய்கள் பரவியது. அதில் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் 7வது வைரஸ்தான் இந்த புதிய கொரோனா. இதன் மூலம்தான் Covid -19 பரவி வருகிறது.

எப்படி உருவானது
இந்த வைரஸ் கடந்த டிசம்பர் மூன்றாம் வாரம் உருவானதாக நம்பப்படுகிறது. வுஹனில் முதல் நபர் இந்த வைரஸ் அறிகுறியுடன் அப்போதுதான் அனுமதிக்கப்பட்டார். அவர் சில நாட்களில் பலியானார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட வைரஸ் தாக்குதல் என்ன மாதிரியான வைரஸ் என்று அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. ஜனவரி முதல் வாரம்தான் இது கொரோன வைரஸ் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

வேகமாக பரவும்
அதன்பின்தான் இதன் தீவிரம் தெரிய தொடங்கியது. ஜனவரி இரண்டாம் வாரம்தான் இந்த வைரஸ் தொடுதல் மூலம் பரவும் என்று கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் வேகமாக இந்த வைரஸ் பரவியது. ஜனவரி கடைசி வாரத்தில் இந்த வைரஸ் வேகமாக பரவி பலி எண்ணிக்கை 1000 ஐ தொட்டது. அப்போதில் இருந்து இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சி நடந்து வருகிறது. உலக சுகாதார மையம் இதை இன்னும் மர்மமான வைரஸ் என்று அழைத்து வருகிறது.

ஆனால் வைரஸ்
இந்த வைரஸ் குறித்து இன்னும் பதில் கிடைக்காத ஒரு கேள்வி என்றால் அது, இந்த வைரஸ் எங்கே தோன்றியது என்பதுதான்? ஆம் இந்த வைரசுக்கு அமெரிக்கா, ஜெர்மனி ஏறத்தாழ மருந்து கண்டுபிடித்துவிட்டது. ஆனால் இன்னும் இந்த வைரஸ் எங்கே தோன்றியது? எப்படி தோன்றியது என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் இந்த வைரஸ் விலங்குகள், வெவ்வால்கள் மூலம் தோன்றி இருக்குமா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

மூன்று எப்படி
இந்த வைரஸ் 4 விதமாக தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒன்று வெவ்வால் மூலம் இந்த வைரஸ் தோன்றி இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இரண்டாவது சீனா மீது யாராவது பயோ வார் தொடுக்க முயற்சி செய்து, இந்த வைரஸ் தற்போது உலகம் முழுக்க பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மூன்றாவதாக இந்த வைரஸ் வுஹனின் உள்ள அசைவ மார்க்கெட்டில் அழுகிய அசைவ உணவுகள் மூலம் பரவி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

கடைசி என்ன
இன்னொரு பக்கம் சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின் பயோ வார் ஆய்வு கூடத்தில் இருந்து கசிந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. சீனாவில் வுஹன் இன்ஸ்டிடுயூட் ஆப் வைராலஜியில்தான் பயோ ஆயுதங்கள் தயாரிப்படுகிறது. சீனாவின் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இந்த பகுதி உள்ளது. இங்கு மிக மோசமான வைரஸ்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இங்கிருந்து வெளியேறி இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

தவறு யார்
கொரோனா வைரசை வைத்து சீனா ஆயுதங்களை தயாரிக்க நினைத்து இருக்கும். கடைசியில் அது தவறுதலாக கசிந்து வெளியே வந்து இருக்கும். இதனால் சீன மக்களே தற்போது சாக தொடங்கி இருக்கிறார்கள். சீனாவின் தவறாகத்தான் இது இருக்கும் என்கிறார்கள். ஆனால் இது எதுவுமே உறுதியாக கூறப்படவில்லை. இப்படித்தான் இந்த வைரஸ் உருவானது என்று இன்னும் உறுதியாக யாரும் சொல்லவில்லை.

சுகாதார மையம்
இந்த வைரஸ் எப்படி தோன்றியது என்று தெரியாமல் உலக சுகாதார மையம் தலையை சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக எல்லோரின் பார்வையும் வுஹன் நகரத்தை நோக்கி திரும்பி உள்ளது. வுஹன் நகரத்தில் சோதனை செய்தால் இதற்கான பதில் கிடைக்கும். முதலில் கொரோனா மூலம் பலியான நபரை கண்டுபிடித்தால் இதற்கான பதில் கிடைக்கும் என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications