சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. 2 மணி நேரத்தில் மாறுகிறது.. திடீரென பலியாகிறார்கள்.. தமிழகத்தில் அதிர்ச்சி தந்த 3 மரணங்கள்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக சிலர் திடீர் என்று பலியாவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா காரணமாக சிலர் திடீர் என்று பலியாவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடைசியாக நிகழ்ந்த மூன்று கொரோனா மரணங்களும் பெரிய அளவில் அறிகுறி இல்லாமல் ஏற்பட்ட மரணங்கள் ஆகும்.

Recommended Video

    வந்துவிட்டது அதிவேக கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்து வருகிறது.

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகளவாக சென்னையில் 149 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் பேட்டி அளித்துள்ளார்.

    கோஸ்ட் டவுன்.. கொரோனாவால் நிலைகுலைந்த நியூயார்க்.. 12,805 பேர் பலி.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்? கோஸ்ட் டவுன்.. கொரோனாவால் நிலைகுலைந்த நியூயார்க்.. 12,805 பேர் பலி.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

    பீலா ராஜேஷ் என்ன சொன்னார்?

    பீலா ராஜேஷ் என்ன சொன்னார்?

    பீலா ராஜேஷ் தனது பேட்டியில், கொரோனா அறிகுறி உள்ள எல்லோரையும் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம். அறிகுறி இல்லாதவர்களை வீட்டில் வைத்துதான் சிகிச்சை அளித்து வருகிறோம். அறிகுறி வந்த உடன் உடனே மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறோம். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பலியான பெண்ணுக்கு வயது 65 ஆகும். இவருக்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்தது.

    மோசமான உடல்நிலை

    மோசமான உடல்நிலை

    அதேபோல் இவருக்கு சர்க்கரை வியாதி. உயர் ரத்த அழுத்தம் இருந்தது என்று பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார். அந்த சென்னை பெண் நேற்று அதிகாலை பலியானார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இவர் சென்னையை சேர்ந்தவர். இவருக்கு எப்படி கொரோனா வந்தது என்று தெரியவில்லை. திடீர் என்று இவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. அதன்பின் திடீர் என்று நன்றாக இருந்தவர் மூச்சு திணறல் காரணமாக பலியாகி உள்ளார்.

     திடீர் மரணம்

    திடீர் மரணம்

    நேற்று அதிகாலை இவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவர் மருத்துவமனைக்கு வந்து வெறும் ஒன்றரை மணி நேரத்தில் பலியாகி உள்ளார். மருத்துவமனைக்கு வரும் போதே மிக மோசமான உடல் நிலையுடன்தான் இவர் வந்தார். மருத்துவமனைக்கு வந்து இவருக்கு வெறும் ஒன்றரை மணி நேரத்தில் உடல் நிலை மிக மோசமாகி பலியாகி உள்ளார். அன்றே செய்யப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதற்கு முன் இதே போல

    இதற்கு முன் இதே போல

    தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் இவர்களுக்கு கடைசி இரண்டு மணி நேரத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. கடைசி இரண்டு மணி நேரத்தில் இவர்கள் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக தற்போது பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார் . அதில், தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்களை எல்லாம் சோதனை செய்து வருகிறது.

    தொடரும் மர்மம்

    தொடரும் மர்மம்

    மிக மோசமான உடல்நிலையுடன் அவர்கொண்டு வரப்பட்டார். அதேபோல் தேனியில் கொரோனா காரணமாக கடந்த வாரம் ஒருவர் பலியானார். இவருக்கு கொரோனா இருந்தது மரணத்திற்கு பின்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு கொரோனா அறிகுறியே இல்லை. இவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சில மணி நேரங்களில் பலியானார். அதன்பின்தான் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    அடுத்தடுத்து மூன்று மரணம்

    அடுத்தடுத்து மூன்று மரணம்

    தமிழத்தில் அடுத்தடுத்து மூன்று மரணங்கள் அறிகுறி இல்லாமல் கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அதிலும் இவர்களுக்கு கடைசி இரண்டு மணி நேரத்தில் கொரோனா தீவிரம் அடைந்துள்ளது. கடைசி இரண்டு மணி நேரத்தில் இவர்கள் பலியாகி உள்ளனர். இது தொடர்பாக தற்போது பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார் . அதில், தமிழகத்தில் கொரோனா காரணமாக ஏற்படும் மரணங்களை எல்லாம் சோதனை செய்து வருகிறது.

    விசாரிக்க முடிவு

    விசாரிக்க முடிவு

    எங்கு தவறு நடக்கிறது என்று சோதனை செய்து வருகிறோம். இதற்காக தனியாக குழு அமைத்து உள்ளோம். இந்த குழு முதல் ஆலோசனை கூட்டத்தை முடித்துள்ளது. திடீர் மரணம் எப்படி ஏற்படுகிறது. இதை எப்படி தடுப்பது என்று ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் மரணம் குறையும் என்று நம்புகிறோம், என்று பீலா ராஜேஷ் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Coronavirus: The pattern emerges in the last three deaths in Tamilnadu including Chennai death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X