தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா.. 536477 பேர் இதுவரை பாதிப்பு.. குறையும் ஆக்டிவ் கேஸ்கள்!
சென்னை: தமிழகத்தில் இன்று 5569 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 536477 பேருக்கு தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உயர்ந்து வருகிறது. தினமும் 5500 + கேஸ்கள் தமிழ்கத்தில் பதிவாகி வருகிறது.
அதே சமயம் தமிழ்க்கத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறத. 46453 பேர் தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

டிஸ்சார்ஜ் எண்ணிக்கை
தமிழகத்தில் 5556 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 481273 பேர் தமிழகத்தில் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 66 பேர் இன்று தமிழகத்தில் பலியாகி உள்ளனர். 8751 பேர் தமிழகத்தில் மொத்தமாக பலியாகி உள்ளனர்

சென்னை எப்படி
இன்று சென்னையில் 987 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் பாதிப்பு ஒரே அளவில் கூடி வருகிறது. சென்னையில் 9966 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். 154624 பேர் சென்னையில் மொத்தமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்கள் எப்படி
கோவையில் தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்து வருகிறது.இன்று கோவையில் 562 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 25344 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 293 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 32256 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று சேலத்தில் 286 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 16209 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்டிங் எப்படி
தமிழகத்தில் இன்று புதிய கேஸ்களை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகும்.
இன்று 85117 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
6388583 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 83265 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
6190593 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications