தமிழகத்தை நெருங்க முடியாத 2ம் அலை.. தொடர்ந்து சரியும் கொரோனா கிராப்.. இன்று 1652 பேர் பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 7,61,568 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கி உள்ளது. நியூயார்க், பாரிஸ் போன்ற பெரிய நகரங்களில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டது.
இந்தியாவிலும் டெல்லியில் தினசரி கேஸ்கள் 7500க்கும் அதிகமாக வருகிறது. ஆனால் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு வேகமாக குறைய தொடங்கி உள்ளது.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை நெருங்க கூட முடியாத அளவிற்கு தமிழகத்தில் கேஸ்கள் குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று 1652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 7,61,568 பேர் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டிஸ்சார்ஜ்
2314 பேர் இன்று தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 18 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 7,34,970 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 11,513 பேர் இதுவரை தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தமிழகத்தில் 15085 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

சென்னை
சென்னையில் இன்று 492 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 209646 பேருக்கு சென்னையில் இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46757 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 112பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 44536 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் எண்ணிக்கை
11199077 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 62415 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 61644 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 10916522 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications