தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா உறுதி - 869 பேர் டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,26,943 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 682 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன்மூலம் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,26,943 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,07,744 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் 6971பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 869 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 228 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா தாக்கம் மிகவும் குறைந்துள்ளது. 20 மாவட்டங்களிலும் 10க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இன்றும் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த 6 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 3 பேரும், கோவை மாவட்டத்தில் ஒருவரும், விருதுநகர் மாவட்டத்தில் ஒருவரும் தஞ்சாவூர் மாவட் டத்தில் 1 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருவரும் இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 247 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். தற்போது 2156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை இங்கிலாந்தில் இருந்து 2,300 பயணிகள் வந்துள்ளனர். அவர்களில் 2,146 பேர் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. மற்றவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications