தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா - இன்று எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,534 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் 7, 74, 710 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,534 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,74,710 பேராக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,873 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,51,535 ஆக அதிகரித்துள்ளது.
உலக அளவில் 6 கோடி பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 லட்சம் பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். 4 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு 92 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 86 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழகத்தில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1,534 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7, 74, 710 பேராக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 914பேர் ஆண்கள், 619பேர் பெண்கள், திருநங்கை ஒருவர்.
இன்று 1,873பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,51,535ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 16பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் தனியார் மருத்துவமனையிலும், 8 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11, 655ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 11,520 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் 218 பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று ஒரே நாளில் 68,082 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 17லட்சத்து 41 ஆயிரத்து 603ஆக அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications