அந்த கட்டுப்பாடு இப்போது வேண்டாமே! முதல்வர் ஸ்டாலின் மீட்டிங்கில் அதிகாரிகள் அட்வைஸ்.. சொன்னது என்ன?
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தியா முழுக்க கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 1800க்கும் அதிகமாக அதிகாரபூர்வ ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி உள்ளனர். தினசரி கொரோனா கேஸ்கள் 35 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் புதிய கொரோனா அலைகள் தோன்றி உள்ளன. தமிழ்நாட்டிலும் இதுவரை 121 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் தமிழ்நாட்டிலும் உயர்ந்துள்ளது.

ஓமிக்ரான் கேஸ்கள்
தமிழ்நாட்டில் இதுவரை ஆயிரத்திற்கு கீழ் ஓமிக்ரான் கேஸ்கள் பதிவாகி வந்தது. இந்த நிலையில் கேஸ்கள் திடீரென உயர்ந்து 1700க்கும் அதிகமாக தற்போது பதிவாகி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது உறுதியாக தெரிய துவங்கி உள்ளது. தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகமாக உள்ளது. இதனால் சமூக பரவல் தொடங்கிவிட்டது. 3 அலையும் தொடங்கிவிட்டது என்று ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.

தமிழ்நாடு லாக்டவுன்
இந்த நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். தமிழ்நாட்டில் ஏற்கனவே தியேட்டர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டுமே செல்ல அனுமதி, பொது கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்த நிலையில் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமா என்பது குறித்து இன்று முதல்வர் ஆலோசனை செய்தார்.

முதல்வர் ஸ்டாலின்
தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். சுகாதாரத்துறை வல்லுனர்கள், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் இரவு நேர லாக்டவுன், வார இறுதி நாட்களில் வழிபாட்டுத்தலங்களை மூடுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இது போக வேறு இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம்.

ஸ்டாலின் ஆலோசனை
அதன்படி கண்டெயின்மெண்ட் பகுதிகளை அதிகரிக்க வேண்டும் என்று வல்லுனர்கள் முதல்வரிடம் ஆலோசனை வழங்கி உள்ளனர். அதாவது முதல் இரண்டு அலைகளின் போது கண்டெயின்மெண்ட் கட்டுப்பாடுகள்தான் அதிக அளவில் உதவின. கேஸ்கள் அதிகம் இருக்கும் தெருக்களில் மட்டும் முழு கட்டுப்பாடுகள், பேரிகேடுகள் போடப்பட்டது. மொத்தமாக ஏரியாவே மூடப்படாமல் தெருக்கள் மட்டும் கண்டெயின்மெண்ட் பகுதிகளாக மாற்றப்பட்டால் அது பயன் அளிக்கும் என்று வல்லுனர்கள் முதல்வரிடம் ஆலோசனை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

பொது போக்குவரத்து
அதேபோல் பொது போக்குவரத்து முடக்கம் இப்போது வேண்டாம். அந்த அளவிற்கு இன்னும் கேஸ்கள் உயரவில்லை. இதனால் இப்போது அந்த கட்டுப்பாடு தேவை இல்லை. மாவட்டங்களுக்கு இடையிலும் பயண கட்டுப்பாடு தேவை இல்லை. பொங்கலுக்கு பின் ஒருவேளை கேஸ்கள் அதிகரித்தால் அப்போது முடிவு எடுக்கலாம். இப்போது போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டியது இல்லை என்று அதிகாரிகள் ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications