என்ன செய்ய கூடாது? எப்போது டாக்டரை பார்க்க வேண்டும்? கொரோனா பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய 5 விஷயங்கள்!
கொரோனா தொடர்பாக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
சென்னை: கொரோனா தொடர்பாக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
Recommended Video
சீனா, இத்தாலி , ஈரான், தென் கொரியா, அமெரிக்கா, இந்தியா என்று உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வருகிறது. உலகம் முழுக்க தற்போது 169605 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 6,518 பேர் பலியாகி உள்ளனர்.
உலகம் முழுக்க 120 நாடுகள் இதனால் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்பாக தினமும் பல செய்திகள் வந்தாலும் இன்னும் மக்கள் இது தொடர்பான அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இந்த கட்டுரை!

எப்படி வந்தது?
இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் மாகாணத்தில் தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பெரும்பாலும் வெளவால்கள் மூலம் பரவி இருக்கலாம் என்கிறார்கள். கொரோனா என்பது ஏற்கனவே உள்ள வைரஸ். இது கொரோனா குடும்பத்தின் 7வது வைரஸ். கொரோனா குடும்ப வைரஸ் மூலம் தான் சார்ஸ், மெர்ஸ் நோய்கள் வந்தது. இந்த புதிய கொரோனா மூலம் பரவும் நோய்க்கு Covid -19 என்று பெயர்.

எப்படி வந்தது?
இந்த வைரஸ் சீனாவில் உள்ள வுஹன் மாகாணத்தில் தோன்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது பெரும்பாலும் வெவ்வால்கள் மூலம் பரவி இருக்கலாம் என்கிறார்கள். கொரோனா என்பது ஏற்கனவே உள்ள வைரஸ். இது கொரோனா குடும்பத்தின் 7வது வைரஸ். கொரோனா குடும்ப வைரஸ் மூலம் தான் சார்ஸ், மெர்ஸ் நோய்கள் வந்தது. இந்த புதிய கொரோனா மூலம் பரவும் நோய்க்கு Covid -19 என்று பெயர்.

என்ன அறிகுறிகள்
இந்த கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு உண்டான அறிகுறிகளை கொண்டு இருக்கும். மிக மோசமான இருமல், வறட்டு இருமல் இருக்கும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். சிலருக்கு உறுப்புகள் கூட செயல் இழக்கும். குளிர் காய்ச்சல் இருக்கும். இதை சாதாரண மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியாது. சிலருக்கு மோசமான வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது மருத்துவரை காண வேண்டும்?
உங்களுக்கு மேற்கொண்ட அறிகுறிகள் திடீர் என்று வந்தால் ஒருநாள் தனி அறையில் இருப்பது நல்லது. ஆனால் ஒரு நாளுக்கு மேல் இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனே சுகாதாரத்துறையின் ஹெல்ப்லைன் எண்ணுக்கு அழைத்து தகவலை தெரிவிக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கு தேவையான சிகிச்சைகளை, சோதனைகளை மேற்கொள்வார்கள். உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மாஸ்க் அணிவது நல்லது.
உலகம் முழுக்க கொரோனா பரவி வரும் நிலையில் மத்திய அரசு கொரோனா வைரஸ் உதவி எண்ணை அறிவித்துள்ளது
இலவச உதவி எண் : +91-11-23978046

எப்படி தடுக்க வேண்டும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்கும் குழந்தைகளை இந்த வைரஸ் தாக்குவதில்லை. அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் கொடுக்கும் உணவுகளை எடுக்கலாம். அதே சமயம் கைகளை அடிக்கடி கழுவுவது, சரியாக குளிப்பது, முகங்களை அடிக்கடி கழுவுவதும் ஆகியவை பலன் அளிக்கும். முகத்தை அடிக்கடி தொட கூடாது. அதே சமயம் வைரஸ் அறிகுறி இல்லாத போது மாஸ்க் அணிய கூடாது. அறிகுறி இருந்தால் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

என்ன தகவல்
இந்த வைரஸ் குறித்து உலகம் முழுக்க இன்னும் பலர் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உலக சுகாதார ஆராய்ச்சி மையத்திற்கே இது இன்னும் புதிரான வைரஸாகவே இருக்கிறது. அதனால் இதை பற்றி வெளியாகும் வாட்ஸ் ஆப் வதந்திகளை நம்ப வேண்டாம். ரசம், சாணம், கோமியம், மது ஆகியவை இந்த வைரஸை குணப்படுத்தாது. அதேபோல் சிக்கன் மட்டன் மூலம் இந்த வைரஸ் பரவாது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications