பரபரப்பு ஆய்வு.. சுளீர்னு வெயில் வெளுத்தெடுத்தா.. கொரோனா ஓடிருமாம்.. அமெரிக்கா தரும் புதிய நம்பிக்கை
இந்தியாவின் காலநிலை கொரோனா வைரஸை அழிக்கும் என கூறப்படுகிறது
சென்னை: அளவுக்கு அதிகமான வெப்பம், சூரிய வெளிச்சம், ஈரப்பதமான சூழலில் கொரோனா பரவாது, இது இந்தியாவுக்கு சாதகம் என்கிறது அமெரிக்க ஆய்வு.. இது உண்மையா? நமக்கு இதெல்லாம் சாத்தியமா? கொரோனாவுக்கு எதிராக இயற்கை நமக்கு ஒத்துழைக்குமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
திணற வைத்து வரும் கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. இன்னும் இதுதான் அறிகுறிகள் என்று உறுதியாக ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.. எனினும் அந்த வைரஸ் பரவல் குறித்த புதுபுது தகவல்கள் தினந்தோறும் வெளிவந்த வண்ணமே உள்ளன.

அந்தவகையில் அமெரிக்கா ஒரு விஷயத்தை சொல்லி உள்ளது.. அதுவும் இந்தியாவுக்கு சாதகமான சமாச்சாரத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்க உள்துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைமை இயக்குநர் பில் பிரையன் வெள்ளை மாளிகையில் ஒரு பேட்டி தந்திருந்தார்.
அதில், "நாங்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, அதிகமான சூரிய வெளிச்சம், வெப்பம், ஈரப்பதமான சூழல் இருந்தால் கொரோனாவைரஸ் வேகமாக உயிரிழந்துவிடும் என தெரியவந்துள்ளது.. சூரியவெளிச்சம் படுவதால் அதன் பரவல் தன்மை குறையும்.. அதுவும் நேரடியாக சூரிய ஒளி பட்டால், இந்த கொரோனா வைரஸ் வேகமாக உயிரிழக்கும்.. ஐஸோபுரோபைல் ஆல்கஹால் இந்த வைரஸை 30 செகண்ட்களில் கொன்றுவிடக்கூடியது.
அளவுக்கு அதிகமாக சூரிய வெளிச்சம் படும்போதும், வெயில் அதிகமாக இருக்கும்போதும், இந்த கொரோனா வைரஸ் அழிந்துவிடும்.. அதன்மூலம் உயிரிழப்பும் குறையும். வெப்பம், சூரியஒளி, ஈரப்பதம் இப்படிப்பட்ட சூழல் இருப்பது இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.. கோடைகாலம் இருக்கும் நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது குறைவதால், அது எங்களுக்கு சிறந்த வாய்ப்பு" என்றார்.
இந்தியாவுக்கு சாதகமான விஷயமாக இதை நாம் எடுத்து கொண்டாலும், அமெரிக்கா சொல்லும் இந்த கூற்று நமக்கு எந்த அளவுக்கு பொருந்தும்? சாத்தியம்? என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியது. இந்தியாவை பொறுத்தவரை எப்போதுமே நமக்கு நல்ல வெயில் உண்டு... இந்த தொற்று பரவ தொடங்கியபோதே, குளிர்ந்த பகுதிகளில் பரவியதை போல், உலகின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான பகுதிகளில் அதிக அளவு பரவவில்லை என்று ஒரு ஆய்வில் கண்டறிந்து சொல்லப்பட்டது.. இதைதான் இப்போது அமெரிக்காவும் தெரிவித்துள்ளது. 32 டிகிரி வெயிலில் கொரோனா அழிந்து விடும் என்று ஒருமுறை ஐதராபாத் டாக்டர் நாகேஷ்வர் ரெட்டியும் தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் இந்தியாவுக்கு சாதகமான சூழலே நிலவி வருகிறது.. வழக்கமாக ஏப்ரல் மாதங்களில் சராசரியாக 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும்... இந்த வெப்பத்திற்கு வைரஸ் நீண்ட நாள் உயிருடன் இருக்காது... அதனால் நிச்சயம் நாம் அதனை கட்டுப்படுத்திவிடலாம் என்றே தெரிகிறது.. எப்படியும் மே மாதத்தில் இருந்து வெயில் கொளுத்தி எடுக்கும்.. 100 டிகிரி வெப்பம் என்பது இப்போதே சராசரியாக மாவட்டங்களில் நிலவி வருகிறது.. இது எல்லாவற்றிற்கும் மேலாக "கத்தரி" நமக்கு கை கொடுக்கும்.
அதாவது சூரிய ஒளி, வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் செல்லும்போதுதான் வைரஸ் உயிர்வாழ்வது கடினம் என்று ஆய்வு சொல்வதால் எல்லாமே நமக்கு சாதகமாகத்தான் இருக்கும்.. ஏற்கனவே நம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதால்தான் பலி எண்ணிக்கையில் பின் தங்கி உலக நாடுகளுக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறோம்.. இந்த சூழலில் நமக்கு வெயில் கைகொடுக்கும்போது நிச்சயம் நல்ல பலன்தான் கிடைக்கும்.. வருஷா வருஷம் வெயில் வாட்டி வதைத்து, எத்தனையோ பேர் ரோடுகளில் சுருண்டு விழுந்து மாண்டிருக்கிறார்கள்.. ஆனால் இந்த முறை "கத்தரி" நம்மை கைவிடாமல் காக்க போகுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications