சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிலும் வேகமாக பரவும்.. 20 நாடுகளுக்கு வார்னிங்.. கொரோனா குறித்த அதிர்ச்சி தரும் ஜெர்மனி!

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வரும் காலங்களில் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று ஜெர்மன் நிறுவன ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வரும் காலங்களில் வேகமாக பரவ வாய்ப்புள்ளது என்று ஜெர்மன் நிறுவன ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 811 ஆகி உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 5000 பேர் இந்த நோய் தாக்குதலால் பலியாகி இருக்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்நாட்டு மக்களை இது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மொத்தம் 37,198 பேர் சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் ஏற்கனவே மூன்று பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுக்க வேகம்

உலகம் முழுக்க வேகம்

இந்த நிலையில் உலகம் முழுக்க இப்படி வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கண்டிப்பாக இந்தியாவிலும் பரவ வாய்ப்புள்ளது என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதன்படி ஜெர்மனியில் உள்ள ஹும்போல்ட் பல்கலைக்கழகம் மற்றும் ராபர்ட் கோச் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த ஆய்வை செய்துள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இன்னும் 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவ அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு இருக்கிறது.

நாடுகள் பட்டியல்

நாடுகள் பட்டியல்

இந்த 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் ஜப்பான் முதல் இடத்தில் உள்ளது. ஆசியாவில் இருக்கும் நாடுகள்தான் இந்த பட்டியலில் அதிகம் இருக்கிறது. இந்த நாடுகளில் சில நாடுகளுக்கு ஏற்கனவே வைரஸ் பரவி விட்டது. இன்னும் இந்த நாடுகளுக்கு வேகமாக வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. பலர் இந்த நாடுகளில் வைரஸால் பாதிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

உலகம் முழுக்க எப்படி

உலகம் முழுக்க எப்படி

உலகம் முழுக்க மொத்தம் 4000 விமான நிலையங்களை இந்த ஆய்விற்காக, ஆய்வு செய்து இருக்கிறார்கள். இதில் இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி விமான நிலையங்களுக்கு நோய் பரவ அதிக சாத்தியம் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. டெல்லி விமான நிலையத்திற்குத்தான் இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது. சீனாவில் இருந்த நோய் பாதித்த பலர், அல்லது நோயாளிகளுடன் தொடர்பு கொண்ட பலர் இங்கே வர வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எப்படி செய்யப்பட்டது

எப்படி செய்யப்பட்டது

இந்த ஆய்வு எப்படி செய்யப்பட்டது என்றால், சீனாவில் நோய் இருக்கும் ஒருவருடன் தொடர்பு கொண்ட இன்னொருவர், இந்தியா வர வாய்ப்புள்ளது. அவர் மூலம் இந்தியாவிற்கு நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இந்த கொரோனா இன்னும் வேகமாக பரவும். இதில் நோய் இல்லாத சில நபர்களுக்கு இந்தியா திரும்பிய பின் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. கடல் உணவுகள் மூலம் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. இந்தியா சீனா கடல் தொடர்பை கொண்டுள்ளது, என்று இதில் கூறப்பட்டுள்ளது.

தவறாக முடிய வாய்ப்புள்ளது

தவறாக முடிய வாய்ப்புள்ளது

ஆனால் இந்த ஆய்வு சமயத்தில் தவறாக முடிய வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்படி ஆய்வு செய்தால் அது பெரிய அளவில் தவறாக முடியும். இந்த முடிவுகளை நம்ப முடியாது. இந்த வைரஸ் புதுமையான வைரஸ். இதற்கான ஆராய்ச்சி முறைகளை புதிய வகையில் மேற்கொள்ள வேண்டும். பழைய ஆராய்ச்சி முறைகளை இதற்கு பயன்படுத்த கூடாது என்று கூறியுள்ளனர்.

English summary
Coronavirus will spread in India too soon says German Research.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X