இன்ப அதிர்ச்சி! மொத்தமாக மாறுது சென்னை மெரினா.. 'ஓபன் ஏர் தியேட்டர்' மாநகராட்சியின் செம பிளான்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் திறந்தவெளி தியேட்டர் அமைக்க பெருநகர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தலமாக இருக்கும் மெரினா கடற்கரையில், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடங்கள், திறந்த வெளி திரையரங்கங்கள் போன்றவை அமைய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக உள்ளது.
சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை உள்ளது. இந்தியாவின் மிக நீளமாக நகர்ப்புற கடற்கரை நமது சென்னை மெரினா கடற்கரை தான். சென்னை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் மெரினா பீச் இருக்கின்றனது. காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வர்.

இதேபோன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இது இருக்கின்றது. வார விடுமுறை நாட்கள், புத்தாண்டு தினத்தில் சென்னை கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் இங்கு வந்து செல்வதற்கு இணங்க மாநகராட்சியும் கடற்கரை பகுதியை சுத்தமாக பராமரித்து வருகிறது.
மேலும், மெரினா கடற்கரையை மேம்படுத்தவும் பல்வேறு புது நடவடிக்கைகளையும் மாநகராட்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் படி திறந்தவெளி திரையரங்கம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இரு முறை இங்கு திறந்தவெளி திரையரங்கம் அமைக்கப்பட்டு பாடல்கள், திரைப்படங்கள் ஒளிபரப்பபட்டன.
இந்த நிலையில் தான் சென்னை மெரினாவில் திறந்தவெளி திரையரங்கம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. கடற்கரையை அழகுப்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் கூறுகையில், "உலகின் நீளமான கடற்கரைகளில் சென்னை மெரினாவும் ஒன்று. மெரினாவை சர்வதேச தரத்தில் உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார்.
மெரினா தொடர்பான நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளின் தீர்ப்பிற்காக காத்திருக்கிறோம். இந்த தீர்ப்பிற்கு பிறகு சர்வதேச அளவில் ஆலோசகரை நியமனம் செய்து சுற்றுச்சூழல் விதிகளின் படி தற்காலிக கட்டமைப்புடன் "திறந்தவெளி திரையரங்குகள்" அமைக்கப்படும். இதேபோன்று குழைந்தைகள், பெரியவர்கள் அனைவருக்குமான பார்க்குகள் அமைக்கப்படும்.
இதேபோன்று குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்களுடன் கூடிய வசதி, மாற்றுத் திறனாளிகள் கடல் அலையை ரசிப்பது போன்ற அமைப்பு, முதியவர்கள் கடல் அலையை ரசிக்க பிரத்யேக வசதி, இசை, நீருற்று போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது" என்றார்.
சென்னையில் மிக முக்கிய சுற்றுலா தலமாக இருக்கும் மெரினா கடற்கரையில், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு இடங்கள், திறந்த வெளி திரையரங்கங்கள் போன்றவை அமைய இருப்பதாக வெளியாகும் தகவல்கள் சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக உள்ளது. இவை அனைத்தும் நிரந்தர கட்டமைப்புகளாக இன்றி தற்காலிக கட்டமைப்புகளாக அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. கடலோர பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு இவற்றை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இன்று (25.08.2024) மெரினா கடற்கரையில் நடைபெற்ற "நம்ம மெரினா நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு இயக்கத்தினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான அதிநவீன கடற்கரை மோட்டார் வாகனங்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் ரோபோடிக் இயந்திரங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் இயந்திரங்களின் செயல்பாடுகளை இயக்கி வைத்து, 411 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications