Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழலா? ஆதாரம் இருந்தால் அவையிலே நிரூபிக்க வேண்டும்..அனலை கக்கிய முதல்வர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எந்தவித ஆதாரமும் இன்றி எதிர்க்கட்சி தலைவர் பேசி இருக்கிறார் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே நிரூபிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. மொத்தம், 7301 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதற்கான, எழுத்துத் தேர்வு 2022ஆம்ஆண்டு ஜூலை 24ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்விற்கு 22,02,942 விண்ணப்பித்திருந்த நிலையில் 18,36,535 தேர்வில் பங்கேற்றனர்.

குரூப் 4 காலி பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் 274ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்களின் எண்ணிக்கை 2,108ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டன. குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக லட்சக்கணக்கானோர் காத்திருந்த நிலையில் கடந்த 25ஆம் தேதி மாலையில் தேர்வு முடிவுகள் வெளியானது.

 குரூப் 4 தேர்வில் முறைகேடு புகார்

குரூப் 4 தேர்வில் முறைகேடு புகார்

தென்காசி ஆகாஷ் பிரண்ட்ஸ் என்கிற ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற 2,000 பேர் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியன .மேலும், மாநில அளவில் முதல் 11 இடங்களில் 6 இடங்களை குறிப்பிட்ட தேர்வு மையத்தில் படித்த மாணவர்கள் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல காரைக்குடியில் ஒரு பயிற்சி மையத்தில் படித்த 700 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியானது.

எடப்பாடி பழனிச்சாமி

எடப்பாடி பழனிச்சாமி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு தொடர்பாக சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, " தென்காசியில் ஒரு தனியார் மையத்தில் பயிற்சி பெற்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், தேர்வு எழுதியவர்களில் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் உரிய விசாரணை நடத்தி தவறு ஏதேனும் நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

முதல்வர் மு.க ஸ்டாலின்

முதல்வர் மு.க ஸ்டாலின்

இதற்குப் பதிலளித்து பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், " டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எந்தவித ஆதாரம் இன்றி எதிர்க்கட்சி தலைவர் பேசி இருக்கிறார். எனவே அந்த சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

 பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் கேள்வி எழுப்பினர்.இது குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளிக்கையில், இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக பதில் அளித்தார்.

2018 குரூப் 4 தேர்வில் முறைகேடு

2018 குரூப் 4 தேர்வில் முறைகேடு

கடந்த 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் முதல் 100 இடங்களில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், பிற மாநிலத்தவரை இறக்குமதி செய்யும் ஆணையமாக டிஎன்பிஎஸ்சி செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

திமுக ஆட்சியில் நடவடிக்கை

திமுக ஆட்சியில் நடவடிக்கை

டிஎன்பிஎஸ்சி மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. டிஎன்பிஎஸ்சி ஊழல் வழக்கில் கார் ஓட்டுநர்கள் உள்ளிட்ட சாதாரண பணிகளில் உள்ளவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி ஊழலில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய திமுக ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். எனவே, இந்த முறையும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்ற கேள்வி தேர்வர்கள் மத்தியில் எழுந்தன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+