ஆரம்பிச்சாச்சு.. தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு... இன்று சென்னையில் தொடக்கம்...!
எம்பிபிஎஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டார்.
சென்னை: தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு சென்னையில் தொடங்கி உள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டது.

கடந்த 3-ந்தேதி ஆன்லைன் மூலம் இதனை விண்ணப்பிக்க, இறுதி நாளாகவும் அறிவிக்கப்பட்டது.. பிறகு, மேலும் 3 நாட்கள் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி 40,264 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 36,100 பேர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 22,643 பேரும், தனியார் நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 13,457 பேரும் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.. இதற்கான முழுமையான பணி நிறைவடைந்ததும் சீட் மெட்ரிக்ஸ் பணி தொடங்கும்..
இன ஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்கள் பிரிக்கப்பட்டு தர வரிசைபடி லிஸ்ட்டும் தயாரிக்கப்படும்... 2 நாட்களுக்கு முன்பு எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் அதாவது இன்றைய தினம் தொடங்க உள்ளதாக கூறினார்..
அந்தவகையில், தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று காலை 9 மணிக்கு சென்னை ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவமனையில் துவங்கி நடைபெற்று வருகிறது.
2022 - 23ம் ஆண்டிற்கான மருத்துவ படிப்புகளுக்கு மொத்தமுள்ள 8ஆயிரத்து 225 இடங்களுக்கு ஆன்லைன் மூலமாக, கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இன்று முதல் கவுன்சிலிங் நடக்கிறது.. இன்று முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், 20ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications