கொலை வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ விடுதலை.. சிறப்பு நீதிமன்றம் பரபர தீர்ப்பு!
சென்னை: ரியல் எஸ்டேட் பிரமுகர் கொலை வழக்கில், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை கொளத்தூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி புவனேஸ்வரன் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், கடந்த 2012 ஜனவரி 10ஆம் தேதி மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நிலத் தகராறு தொடர்பான பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நடந்ததாக வழக்குப்பதிவு செய்த கொளத்தூர் போலீசார், சையது இப்ராகிம், செல்வம், முரளி, குமார் ஆகியோருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில், வில்லிவாக்கம் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனின் துாண்டுதலின்படி தான் தனது மகன் கொலை செய்யப்பட்டதாக புவனேஸ்வரனின் தந்தை சிவா குற்றம்சாட்டியதோடு, குற்றப்பத்திரிகையில் ரங்கநாதனின் பெயரை சேர்க்கவில்லை என்பதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குற்றப்பத்திரிகையில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளதாக கூறி, அதை ரத்து செய்ததுடன், டி.எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் சி.பி.ஐ விசாரணை நடத்த 2014ஆம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்படி விசாரணை நடத்திய சி.பி.ஐ, திமுக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன், சையது இப்ராகிம், செல்வம், சதீஷ், முரளி, குமார், தணிகாசலம், பாலசந்திரன் உள்பட 12 பேருக்கு எதிராக, சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. கடந்த 2020 முதல் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில், சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணை, இரு தரப்பு வாதங்கள் ஆகியவை முடிந்து தீர்ப்பிற்காக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் நீதிபதி கே.ரவி இன்று தீர்ப்பளித்தார்.
புவனேஸ்வரன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். அரசுத் தரப்பில் சாட்சியங்கள் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதன் உள்ளிட்டோரை விடுதலை செய்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
ரங்கநாதன் தமிழ்நாடு சேமிப்பு கிடங்குத் தலைவராக கடந்தாண்டு முதல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2011 வாக்கில், ரங்கநாதன் நில அபகரிப்பு வழக்கிலும், குண்டர் சட்டத்திலும் கைதாகி சிறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications