கோவை டூ சென்னை! தமிழக காங்கிரஸ் நடத்தும் பாதயாத்திரை! 550 கி.மீ. தொலைவுக்கு 18 நாட்கள் இலக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்கக்கோரி தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோவையிலிருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொள்ளப்படவுள்ள தகவலை கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த பாத யாத்திரை, 550 கி.மீ. தொலைவும் 18 நாட்கள் இலக்கும் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

மக்கள் விரோதம்

மக்கள் விரோதம்

பா.ஜ.க. ஆட்சி அமைந்து எட்டு ஆண்டுகளாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். இதனால் விலைவாசி உயர்வு, விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம், வேலை இழப்பு மற்றும் வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து கடுமையான பாதிப்புகளுக்கு மக்கள் உள்ளாகி வருகிறார்கள். மேலும் வறுமையில் வாடுகிற மக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கடந்த சில நாட்களாக நாள்தோறும் மத்திய பா.ஜ.க. அரசு கடுமையாக உயர்த்தி வருகிறது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 110.85, டீசல் ரூபாய் 100.94 ஆகவும் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோலுக்கான கலால் வரி கூடுதலாக லிட்டருக்கு ரூபாய் 18.70, டீசலுக்கு ரூபாய் 18.34 ஆகவும் உயர்த்தப்பட்டது. இந்த கலால் வரி உயர்வு பெட்ரோலில் 203 சதவிகிதமாகவும், டீசலில் 531 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருப்பதால் மக்கள் மீளமுடியாத துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

 மோடி ஆட்சி

மோடி ஆட்சி

பா.ஜ.க. ஆட்சியில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரியை பலமுறை உயர்த்தியதன் காரணமாக ரூபாய் 26 லட்சம் கோடியை மோடி அரசு வருவாயாக நிரப்பிக் கொண்டது. அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 2014 ஆம் ஆண்டில் 410 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு அதன் விலை ஆயிரம் ரூபாயை எட்டியிருக்கிறது. மோடி ஆட்சிக் காலத்தில் மட்டும் 540 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்


இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இதற்கான வரிவிதிப்பை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை வலுவாக எழுந்தன. ஆனால், மாநில அரசுகள் மீது பழியைப் போட்டுவிட்டு இந்த கோரிக்கையை ஏற்க முடியாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.

கலால் வரி

கலால் வரி

பெட்ரோல், டீசல் மீது கலால் வரி விதிப்போடு செஸ் வரியையும் ஒன்றிய அரசு விதித்து வருகிறது. செஸ் வரி மூலம் வருகிற வருமானத்தை மாநில அரசுகளோடு பகிர்ந்து கொள்ள ஒன்றிய அரசு தயாராக இல்லை. செஸ் வரியை மாநிலங்களோடு பகிர்ந்து கொண்டால் பெட்ரோல், டீசல் வரி விதிப்பை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வரலாம் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்த பரிந்துரையை ஒன்றிய நிதியமைச்சர் ஏற்கத் தயாராக இல்லை. இதன்மூலம் மத்திய அரசின் பிடிவாதப் போக்கு காரணமாகவே பெட்ரோல், டீசல் வரி விதிப்பு ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாதயாத்திரை

பாதயாத்திரை

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் வரி விதிப்பை கொண்டு வரவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைத்துறை தலைவர் மகாத்மா சீனிவாசன் தலைமையில் ஏப்ரல் 11 ம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கோவை ரெட்கிராஸ் மாளிகை அருகிலிருந்து சென்னை நோக்கி பாத யாத்திரை நடைபெறுகிறது. 550 கி.மீ. தூரமுள்ள பாதயாத்திரை 56 தோழர்களுடன் 18 நாட்கள் நடைபெற உள்ளது. மக்களின் ஆதரவைத் திரட்டுகிற வகையில் நடைபெறவுள்ள இந்த பாதயாத்திரையை நான் துவக்கி வைக்க இருக்கிறேன்.

 ஆதரவு தருக

ஆதரவு தருக

எனவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில் பாதயாத்திரை செல்லும் பகுதிகளில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பேராதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+