இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12265 பேருக்கு கொரோனா.. கேரளாவில் தொடர்ந்து அதிகரிப்பு
சென்னை: இந்தியாவில் இதுவரை 34,332,407 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12265 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பண்டிகை நாட்களை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. மக்கள் அதிக அளவில் வெளியே சென்றதால் வரும் நாட்களில் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 461 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 459,875 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
இதுவரை மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் தெரியவில்லை. இந்தியாவில் இதுவரை 33,715,722 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 156,810 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மீண்டும் 1000க்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. இது பரவல் அங்கு அதிகரித்துவிட்டதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. . மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,14,158 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 18,745 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,313 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,55,100 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 39 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 7312 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 49,87,710 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 73,698 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 32,598 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 362 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 48,81,414 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 1000க்கும் கீழ் சென்றுள்ளது. தீபாவளி காரணமாக இதுவரை கேஸ்கள் உயரவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 27,05,548 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 962 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,176 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,58,360 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 11,012 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 19 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,89,014 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 254 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,091 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,42,588 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,335 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 2 பேர் பலியாகி உள்ளனர்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications