தமிழகத்தில் மீண்டும் 1,500-ஐ கடந்த கொரோனா.. ஆக்டிவ் கேஸ்கள் உயர்வு.. இந்த 5 மாவட்டங்களில் அதிவேகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிவேமாக அதிகரித்து வருகிறது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 1500-ஐ கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் வேகம் இரட்டிப்பாகி உள்ளது. இங்கு 776 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

அதிவேகமாக பரவும் கொரோனா

அதிவேகமாக பரவும் கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. இதனால் அரசும், மக்களும் நிம்மதியாக இருந்த நிலையில் ஓமிக்ரான் வைரஸ் புகுந்த நேரத்தில் இருந்து தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 குணமடைந்தவர்கள் எத்தனை?

குணமடைந்தவர்கள் எத்தனை?

இதனால் மொத்த பாதிப்பு 27,51,128 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கொரோனா உயிரிழப்பு குறைவாக பதிவாகி ஆறுதலை தருகிறது. சேலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவர் இறந்துள்ளனர், இதுவரை கொரோனாவுக்கு 36,790 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 624 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 27,05,034 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் மிக மிக குறைவாக இருக்கிறது.

சென்னையில் இரட்டிப்பு

சென்னையில் இரட்டிப்பு

9,304 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 1,02,029 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 5,76,50,087 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 776 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதுவும் பாதிப்பு இரட்டிப்பாகி வருகிறது. செங்கல்பட்டிலும் தொற்று கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

இந்த 5 மாவட்டங்களில் அதிகம்

இந்த 5 மாவட்டங்களில் அதிகம்

செங்கல்பட்டில் 146 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் 80 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 47 பேருக்கும், மதுரையில் 13 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 30 பேருக்கும், திருவள்ளூரில் 58 பேருக்கும், திருச்சியில் 19 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 68 பேருக்கும், ஈரோட்டில் 33 பேருக்கும், சேலத்தில் 29 பேருக்கும், நாமக்கல்லில் 20 பேருக்கும், தஞ்சாவூரில் 16 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கோவை., திருவள்ளூர் மற்றும் திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் பாதிப்பு வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+