தமிழகத்தில் தொடர்ந்து ஆட்டம் போடும் கொரோனா.. ஒரே நாளில் 1,243 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது.. இன்று ஒரே நாளில் மட்டும் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மேலும் 634 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,45,812 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் ஓரளவு அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு 500-க்கு கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 1,000-ஐ தாண்டியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா
சென்னையிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது தவிர கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதியிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மேலும் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 28-ம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் தொடர்ந்து 2-வது நாளாக 1000-ஐ கடந்துள்ளது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

8 பேர் உயிரிழப்பு
இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 8,65,693 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து மேலும் 634 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 8,45,812 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.கொரோனாவுக்கு மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 12,590 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 73,165 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,87,05,851 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

74,954 பேருக்கு பரிசோதனை
இன்று மட்டும் 74,954 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,83,86,249 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சுமார் 7,291 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செங்கல்பட்டில் அதிகரிக்கும் பாதிப்பு
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 134 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோவையில் 103 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கோவையிலும், செங்கல்பட்டிலும் தொடர்ந்து 2-வது நாளாக பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. திருவள்ளூரில் 78 பேருக்கும், தஞ்சாவூரில் 85 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications