சென்னை முதல் டெல்லி வரை.. தீபாவளி ஷாப்பிங்கிற்காக கடைகளில் குவிந்த மக்கள்.. கொரோனா 3ம் அலை அபாயம்?
சென்னை: இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் 3ம் அலை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில்தான்.. தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் செய்து வருகிறார்கள். மக்கள் கூட்டமாக இப்படி வெளியே செல்வது கொரோனா பரவலை அதிகப்படுத்துமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் 3ம் அலை கொரோனா பாதிப்பு ஏற்பட தொடங்கி உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, துருக்கி, யு.கே ஆகிய நாடுகளில் தினசரி பாதிப்பு 40 ஆயிரம், 50 ஆயிரம் என்ற அளவில் பதிவாகி வருகிறது. சீனாவில் கூட 14 பெரிய நகரங்களில் லாக்டவுன் போடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளில் A.Y 4.2 கொரோனா பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா பரவினாலும் இதுவரை மூன்றாம் அலை பாதிப்பு ஏற்படவில்லை. இந்தியாவில் தினசரி பாதிப்பு 13 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.

தீபாவளி ஷாப்பிங்
இந்தியாவில் இதுவரை மூன்றாம் அலை அறிகுறிகள் ஏற்படவில்லை என்றாலும்.. தற்போது தீபாவளியை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் செய்து வருவது மூன்றாம் அலை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் இப்போது துணி கடைகளிலும், வெடி கடைகளிலும், நகை கடைகளிலும் தீவிரமாக ஷாப்பிங் செய்து வருகிறார்கள்.

சென்னை
பொதுவாகவே தீபாவளி நேரத்தில் சென்னையில் ஷாப்பிங் கூட்டம் அதிகரிக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டமாக வந்து ஷாப்பிங் செய்வது வழக்கம். அதேபோல் கடந்த ஒருவாரமாக சென்னையில் மக்கள் தீவிரமாக ஷாப்பிங் செய்து வருகிறார்கள். அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் மொத்தமாக தி நகர் நோக்கி படையெடுத்தனர். தி நகர் தொடங்கி சென்னையின் பல முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக ஷாப்பிங் செய்தனர்.
Recommended Video

டெல்லி மற்ற நகரங்கள்
சென்னையின் முக்கிய ஷாப்பிங் மால்களில் கொஞ்சம் கூட இடைவெளி விடாமல்.. கொரோனாவா அப்படின்னா என்ன என்று கேட்கும் அளவிற்கு கூட்டமாக நின்று ஷாப்பிங் செய்தனர். சென்னையில் மட்டுமின்றி டெல்லியில் இருக்கும் பிரபல மார்க்கெட் பகுதிகள், சூரத், லக்னோ, பெங்களூரில் இருக்கும் பிரபல மார்க்கெட் பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாஸ்க் இல்லை
அதிலும் பல முதியவர்கள் ஷாப்பிங் செய்ய வந்ததும், பலர் குழந்தைகளோடு ஷாப்பிங் செய்ய வந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷாப்பிங் செய்ய வந்த பெரும்பாலான மக்கள் மாஸ்க் அணியாமல் இருந்ததும் இன்னொரு அதிர்ச்சி அளிக்க கூடிய விஷயமாக இருந்தது. பல இடங்களில் மால்களில் ஏசிகள் இயக்கப்பட்டன. இது கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும்.

சமூக இடைவெளி
மக்கள் எங்குமே சமூக இடைவெளி விடவில்லை. பல இடங்களில் மொத்தமாக கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்க விடப்பட்டது. பல்வேறு இடங்களில் தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோதியது. இந்தியாவில் 366 மாவட்டங்களில் LocalCircles என்ற அமைப்பு நடத்திய சர்வேயில் மொத்தம் 2% பேர்தான் இந்தியாவில் மாஸ்க் அணிய விருப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வாய்ப்பு
இதனால் இந்த ஷாப்பிங்கிலும் மக்கள் பெரும்பாலும் மாஸ்க் அணியவில்லை. இந்தியாவில் ஏற்கனவே A.Y 4.2 கொரோனா பரவ தொடங்கிவிட்டது. இது வேகமாக பரவும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த தீபாவளி ஷாப்பிங் மூன்றாம் அலையை ஏற்படுத்தும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. மக்கள் கூட்டமாக வெளியே வந்ததும் கேஸ்களை அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

அறிவுரை கேட்கவில்லை
மாநில, மத்திய அரசு இதற்காகவே பல அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி இருந்தது. ஆனாலும் மக்கள் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. கேரளாவில் ஓணம், ஈகை திருநாளுக்கு பின் கொரோனா கேஸ்கள் அதிகம் வந்தது. அப்போது மக்கள் கூட்டமாக ஷாப்பிங் சென்றதன் விளைவு இப்போதும் கேரளாவில் தொடர்கிறது. இதனால் இந்தியாவிலும் தீபாவளி ஷாப்பிங்கிற்கு பின் கேஸ்கள் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications