குட் நியூஸ்.. தமிழகத்தில் குறையும் கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் தினசரி பாதிப்பு சதம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாக கொரோனா அதிகரித்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக பாதிப்பு சற்று குறைந்துள்ளது. சென்னையில் நேற்று கொரோனா சற்று அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதேபி, இதேபோல் கோவையிலும் பாதிப்பு குறைந்து இருக்கிறது.

குறையும் பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வந்த நிலையில் இரண்டாவது நாளாக பாதிப்பு சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,580 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட குறைவாகும்.

உயிரிழப்பில் மாற்றமில்லை
கொரோனா மொத்த பாதிப்பு 26,35,419 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். .சென்னையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 6 பேர் இறந்துள்ளனர். தஞ்சாவூரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டில் 2 பேரும், மதுரை, மயிலாடுதுறையில் தலா 2 பேரும், திருப்பூரில் 2 பேரும் இறந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கோவையில் இன்று உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.இதுவரை கொரோனாவுக்கு 35,190 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,509 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,83,707 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து குறைவாக இருக்கிறது.
Recommended Video

சென்னை நிலை என்ன?
16,522 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,53,584 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,34,75,212 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 185 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்றை விட பாதிப்பு சற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் உயிரிழப்பில் முதலிடம் உள்ளது. கோவையில் கடந்த 2 நாட்களாக தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

மதுரை
செங்கல்பட்டில் 104 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 32 பேருக்கும், மதுரையில் 19 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 33 பேருக்கும், திருவள்ளூரில் 68 பேருக்கும், திருச்சியில் 44 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 84 பேருக்கும், விருதுநகரில் 9 பேருக்கும், ஈரோட்டில் 137 பேருக்கும், சேலத்தில் 55 பேருக்கும், நாமக்கல்லில் 50 பேருக்கும், தஞ்சாவூரில் 109 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

5 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, செங்கல்பட்டு, ஈரோடு மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. குறிப்பாக தஞ்சாவூரில் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் மக்கள் இதேபோல் தொடர்ந்து கொரோனா வழிபாடு நெறிமுறைகளை பின்பற்றினால் கொரோனா தொற்று மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications