அதிவேகமாக சரியும் கொரோனா.. ஆக்டிவ் கேஸ்களும் குறைவு.. 2 மாவட்டங்களில் பாதிப்பு சதம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தலைநகர் சென்னை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவை உள்பட பல மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

வேகமாக குறையும் கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு 1,500-க்குள் குறைந்த கொரோனா தற்போது 1,500-க்குள் குறைந்து விட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு நேற்றை விட குறைவாகும். இதனால் மொத்த பாதிப்பு 26,99,554 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழப்பு
கொரோனாவுக்கு மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 3 பேர் இறந்துள்ளனர். சென்னையில் 3 பேர் இறந்தனர், நாகப்பட்டினத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 36,072 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,286 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 26,51,431 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது.

சென்னை தொடர்ந்து டாப்
12,051 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,22,835 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 4,98,66,254 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 135 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொடர்ந்து 150-க்கு கீழே குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது.

2 மாவட்டங்களில் சதம்
கோவையில் 123 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் தொடர்ந்து கொரோனா வேகமாக குறைந்து வருகிறது., செங்கல்பட்டில் 86 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 28 பேருக்கும், மதுரையில் 16 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 18 பேருக்கும், திருவள்ளூரில் 25 பேருக்கும், திருச்சியில் 42 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 65 பேருக்கும், விருதுநகரில் 4 பேருக்கும், ஈரோட்டில் 77 பேருக்கும், சேலத்தில் 62 பேருக்கும், நாமக்கல்லில் 47 பேருக்கும், தஞ்சாவூரில் 44 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை, கோவையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து 100-ஐ கடந்து வருகிறது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications