மீண்டும் 200-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னைவாசிகளே உஷார்.. கோவையிலும் தொற்று ஆதிக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சில நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 200-ஐ கடந்து அதிர்ச்சியை எற்படுத்தி இருக்கிறது.

கொரோனா தாக்கம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் சற்று அதிகரித்த கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் கொரோனா சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு அதிகம் எங்கே?
இதனால் மொத்த பாதிப்பு 25,79,130 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர். கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். சேலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டில் தலா 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,367 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,930 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,24,400 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் அதிகமாக இருக்கிறது.

கோவை தொடந்து முதலிடம்
20,363 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,50,856 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,81,22,954 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 209 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் 200-க்கும் மேல் கடந்து சென்று விட்டது. கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

ஈரோட்டில் அதிகம்
கோவையில் மட்டும் 224 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 105 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், மதுரையில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 29 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், திருச்சியில் 68 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 71 பேருக்கும், விருதுநகரில் 9 பேருக்கும், ஈரோட்டில் 169 பேருக்கும், சேலத்தில் 92 பேருக்கும், நாமக்கல்லில் 45 பேருக்கும், தஞ்சாவூரில் 97 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

4 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. கொங்கு மண்டல பகுதிதிகளான கோவை, திருப்பூர், சேலம், ஈரோட்டில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஈரோட்டில் தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது.












Click it and Unblock the Notifications