கோவையை விடாமல் துரத்தும் கொரோனா.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாதிப்பு.. ஈரோட்டிலும் ஆதிக்கம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2 நாட்களாக கொரோனா தொற்று சற்று குறைந்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு நேற்றை விட குறைந்துள்ளது. ஆனால் கோவையில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சற்று குறைந்த கொரோனா
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டவது அலை அதிவேகமாக குறைந்து வந்தது. தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கையும், கடுமையான ஊரடங்குமே கொரோனாவை குறைத்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் மீண்டும் சற்று அதிகரித்த கொரோனா தொற்று கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் கொரோனா சற்று குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பு அதிகம் எங்கே?
இதனால் மொத்த பாதிப்பு 25,75,308 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். சேலத்தில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். இதேபோல் திருப்பூரிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,317 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,807 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,20,584 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் தொடர்ந்து குறைவாக இருக்கிறது.

கோவை தொடர்ந்து ஆதிக்கம்
20,407 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,59,627 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,86,97,187 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 187 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 200-க்கும் மேல் சென்ற கொரோனா பாதிப்பு 200-க்குள் குறைந்து விட்டது. நேற்றை விட இன்று பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால் கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.

சேலத்திலும் அதிகம்
கோவையில் மட்டும் 241 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 105 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 38 பேருக்கும், மதுரையில் 17 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 38 பேருக்கும், திருவள்ளூரில் 91 பேருக்கும், திருச்சியில் 69 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 80 பேருக்கும், விருதுநகரில் 12 பேருக்கும், ஈரோட்டில் 185 பேருக்கும், சேலத்தில் 89 பேருக்கும், நாமக்கல்லில் 53 பேருக்கும், தஞ்சாவூரில் 97 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video

5 மாவட்டங்களில் சதம்
சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு, தஞ்சாவூரில் தினசரி பாதிப்பு 100-ஐ கடந்துள்ளது. கொங்கு மண்டல பகுதிதிகளான கோவை, திருப்பூர், சேலம், ஈரோட்டில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஈரோட்டில் தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இணை நோய்கள் அல்லாத 4 பேர் கொரோனாவுக்கு இன்று உயிரிழந்துள்ளனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications