கொரோனா விஸ்வரூபம்! ஒரேநாளில் 23,459 பேருக்கு தொற்று! 9,026 பேர் டிஸ்சார்ஜ்! 26 பேர் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 91 ஆயிரத்து 985-ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 20 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 9,026 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து நல்வாய்ப்பாக குணமடைந்து பூரண உடல் நலத்துடன் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து 36 ஆயிரத்து 986 -ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கான சிகிச்சை பலனின்றி இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 36,956 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலனவர்கள் கொரோனா மட்டுமின்றி சர்க்கரை, சிறுநீரகம், இதயப்பிரச்சனை உள்ளிட்ட வேறு சில இணை வியாதிகளுக்கும் சிகிச்சை பெற்று வந்தவர்களாக இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மாவட்ட வாரியாக என எடுத்துக்கொண்டால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாகவும் பெரம்பலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பூஜ்யத்திலும் உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் இன்று மட்டும் ஆர்.டி. பிசிஆர் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 037 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதில் 23,459 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications