தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எவ்வளவு கொரோனா பரிசோதனை.. முதல்முறையாக லிஸ்ட் வெளியீடு
சென்னை: தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மொத்தம் 1,21,950 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது,
ஜூன் 7ம் தேதியான இன்று மட்டும் 16,275 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5,92,970 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தனிநபர்கள் என்று பார்த்தால் இதுவரை இன்று மட்டும் 15,671 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 5,66,314 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது

பரிசோதனை விவரம்
தமிழகத்தில் 31,667 பேருக்கு கொரோனா தொற்று ஜுன் 7ம் தேதி நிலவரப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது என்ற விவரத்தையும், இதுவரை எவ்வளவு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. என்ற விவரத்தை தமிழக சுகாதாரத்துறை முதல் முறையாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கோவையில் அதிகம்
சென்னையில் இதுவரை மொத்தம் 1,21,950 சாம்பிள்கள் எடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 3,950, செங்கல்பட்டு மாவட்டத்தில் 13,958, கோவை - மாவட்டத்தில் 22,872, கடலூர் மாவட்டத்தில் 11,918, தருமபுரி மாவட்டத்தில் 9,854, திண்டுக்கல் மாவட்டத்தில் 7,582, ஈரோடு மாவட்டத்தில் 13,421, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,653 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மதுரை 14102 பேருக்கு
இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 9,885 சாம்பிள்கள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 18,366 சாம்பிள்கள், கரூர் மாவட்டத்தில் 8,218 சாம்பிள்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6,565, சாம்பிள்கள், மதுரை மாவட்டத்தில் 14,102 சாம்பிள்கள், நாகை மாவட்டத்தில் 7,958 சாம்பிள்கள், நாமக்கல் மாவட்டத்தில் 7,727 சாம்பிள்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் 3,999 சாம்பிள்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 6,243 சாம்பிள்கள், ராமநாதபுரம் மாவட்டத்தில் 7,074 சாம்பிள்கள் எடுத்து, இதுவரை கொரோனா பரிசோதனை (பிசிஆர்) செய்யப்பட்டுள்ளது.

நெல்லையில் 17624 பேர்
ராணிப்பேட்டையில் 5,480, சேலம் - 22,751, சிவகங்கை - 5400, தென்காசி - 7,163, தஞ்சை - 17,820, தேனி - 16,945, நீலகிரி - 5,604, திருவள்ளூர் - 11,065, திருவாரூர் - 8,448, திருச்சி - 14,453, நெல்லை - 17,624, திருப்பத்தூர் - 9,911, திருப்பூர் - 8,153, திருவண்ணாமலை - 21,996, தூத்துக்குடி - 13,227, வேலூர் - 16,279, விழுப்புரம் - 9,795, விருதுநகர் - 10,803 எனச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அடைப்புக்குறியில் நோய் தொற்று பாதிப்பு விவரம்
- அரியலூர் 3,950 (380)
- செங்கல்பட்டு 13,958 (1854)
- சென்னை 1,21,950 (22149)
- கோவை 22,872 (161)
- கடலூர் 11,918 (481)
- தர்மபுரி 9,854 (13)
- திண்டுக்கல் 7,582 (167)
- ஈரோடு 13,421 ( 73)
- கள்ளக்குறிச்சி 8,653 (272)
- காஞ்சிபுரம் 9,885 (516)
- கன்னியாகுமரி 18,366 ( 87)
- கரூர் 8,218 ( 87)
- கிருஷ்ணகிரி 6,565 (37)
- மதுரை 14,102 ( 312)
- நாகப்பட்டினம் 7,958 (76)
- நாமக்கல் 7,727 (85)
- பெரம்பலூர் 3,999 (143)
- புதுக்கோட்டை 6,243 ( 33)
- ராமநாதபுரம் 7,074 (106)
- ராணிப்பேட்டை 5,480 (130)
- சேலம் 22,751 (216)
- சிவகங்கை 5,400 (35)
- தென்காசி 7,163 (103)
- தேனி 16,945 (124)
- நீலகிரி 5,604 (14)
- திருப்பத்தூர் 9,911 (42)
- திருவள்ளூர் 11,065 (1329)
- திருவண்ணாமலை 21,996 ( 492)
- திருவாரூர் 8,448 (59)
- தூத்துக்குடி 13,227 (329)
- திருநெல்வேலி 17,624 (386)
- திருப்பூர் 8,153 (114)
- திருச்சி 14,453 (116)
- வேலூர் 16,279 ( 64)
- விழுப்புரம் 9,795 (380)
- விருதுநகர் 10,803 (149)
தமிழகத்தில் 10 லட்சம் பேரில் 6420 பேர் என விகிதத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் இந்த விகிதம் 16903 ஆகவும், தேனியில் 12060 ஆகவும் திருநெல்வேலியில் 9386ஆகவும் உள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications