அரசியல்வாதிகளை விடாமல் துரத்தும் கொரோனா..பல்லடம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு தொற்று உறுதி!
சென்னை: பல்லடம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலையின் வீரியம் மிக அதிகமாக உள்ளது.கொரோனா தினசரி பாதிப்பு 6,000-ஐ கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் பலருக்கும் கொரோனா தொற்று எற்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து எம்.எஸ்.எம். ஆனந்தன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்துவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications