"ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து".. சீட் கிடைக்கல.. எக்ஸ்ட்ரா பணம்.. ஷாக் தரும் ரெயில்வே.. என்ன காரணம்?
பாசன்ஜர்ஸ் ரெயில்களை இயக்கலாமே என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன
சென்னை: ஏன்தான் தளர்வுகளை அரசு அறிவித்ததோ? என்று நினைக்கும் அளவுக்கு நம் மக்கள் நடந்து கொண்டு வருகிறார்கள்.. இதனால் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு விடும் அச்சமும் சூழ்ந்துள்ளது..!
2 மாதத்துக்கு முன்புவரை 2வது அலை நம்மை அளவுக்கு அதிகமாகவே பயமுறுத்திவிட்டது.. இதனால், ஸ்டாலின் அரசு, அதிரடியாக லாக்டவுனை அமல்படுத்தியது.. மொத்த அமைச்சர் டீமையும் களத்தில் இறக்கியது..
நேரடி ஆய்வுகள், சோதனைகள், சிகிச்சைகள் என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்ததன் அடிப்படையில், தொற்று மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது..

ஸ்டாலின்
இதனால், தளர்வுகளும் மெல்ல மெல்ல அறிவிக்கப்பட்டுள்ளன.. அந்த வகையில்தான், பஸ்கள், விரைவு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கொங்குவில் தொற்று பாதிப்பு குறையவில்லை.. எனவே, 11 மாவட்டங்களில் பொதுபோக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.. ஆனால் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கட்டுப்பாடுகள்
ஆனால், விரைவு ரயில்களை இயக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிக்கும் முன்பே பல்வேறு கட்டுப்பாடுகளை கூறியிருந்தது.. ரயில் பயணிகள் முன்பதிவு செய்து தான் பயணிக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்பதிவில்லா இருக்கை கொண்ட பெட்டிகள் எந்த ஒரு ரெயிலிலும் இதுவரை இணைக்கப்படாமலும் உள்ளது. மேலும் பயணிகள் ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்படவில்லை.

சீட் பிரச்சனை
அதனால், ரயிலில் செல்பவர்கள் ரிசர்வ் செய்துதான் பயணம் மேற்கொள்கிறார்கள்.. ஆனால், சில நேரம் சீட் கிடைக்காமல் போய்விடுகிறது.. அதுமட்டுமல்லாமல், பொது போக்குவரத்தில் இணைக்கப்படாத 11 மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கும், இந்த ரயில் பயணம் மட்டுமே ஒரே சாய்ஸ்ஸாக உள்ளது..

ரிசர்வேஷன்
இதனாலேயே ரயில்கள் நிரம்பி வழிகின்றன.. சீட்டும் கிடைப்பதில்லை.. ரிசர்வேஷனுக்கும் நிறைய வெயிட்டிங் லிஸ்ட்டில் உள்ளது.. இப்படிப்பட்ட சூழலில்தான், ரெயில்வே துறை கூடுதல் கட்டணம் வசூலித்து அந்த ரெயில்களில் பயணிகளை ஏற்றிவிடும் புது தகவல் வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பி வருகிறது.

கூடுதல் கட்டணம்
நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் வரை இயக்கப்படும் கோவிட் ஸ்பெஷல் புறப்பட தயாராக இருந்திருக்கிறது.. ஆனால், இதற்கு பலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.. அப்போது அங்கு வந்த செக்கிங் இன்ஸ்பெக்டர் கூடுதலாக பணம் பறித்து, கட்டண பயண சீட்டு ரசீது அவர்களுக்கு வழங்கினாராம்.. அதன்பிறகு ரயில் ஏறி சென்றுள்ளனர்.. இதனால் ரயிலில் முண்டியத்து கொண்டு, ஏறும் நிலைமை ஏற்பட்டுள்ளது..

கோரிக்கை
ரயிலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க முடியாமல் இடித்து கொண்டு செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது.. இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. எனவே, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை சேர்க்கலாமே... அல்லது நிறுத்தப்பட்டுள்ள பாசன்ஜர்ஸ் ரெயில்களை இயக்கலாமே என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.
-
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications