நீதிபதி விக்டோரியா கவுரிக்கு எதிராக இடதுசாரிகள் போராட்டம்- வரிந்து கட்டி ஆதரவு தரும் எச்.ராஜா!
நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதை ஆதரித்து ட்விட்டரில் தொடர் பதிவுகளை பதிவிட்டு வருகிறார் பாஜக எச்.ராஜா
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரி நியமிக்கப்பட்டதற்கு எதிராக இடதுசாரிகள் இன்று போராட்டம் நடத்தினர்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கவுரியை உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று மத்திய அரசும் விக்டோரியா கவுரியை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்தது.
ஆனால் பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளை பேசக் கூடியவர் விக்டோரியா கவுரி; சிறுபான்மையினருக்கு எதிராக மோதலை தூண்டும் வகையில் பேசியவர் விக்டோரியா, பாஜகவின் அகில இந்திய மகளிர் அணி செயலாளராக இருந்தவர் என பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. அவரது நியமனத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் 21 மூத்த வழக்கறிஞர்களும் குரல் கொடுத்தனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் விக்டோரியா கவுரியா பதவியேற்க உச்சநீதிமன்ற தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் பதவி ஏற்றனர். அவர்களில் விக்டோரியா கவுரியும் ஒருவர்.
விக்டோரியா கவுரி பதவியேற்பதற்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோல இடதுசாரி கட்சியினரும் சென்னை உயர்நீதிமன்றம் அருகே விக்டோரியா கவுரிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழக்கறிஞர்கள் 54 பேர் விக்டோரியா கவுரியை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இருந்து நீதிபதியாக இருக்கிறார். விக்டோரியா கௌரி சட்டத்தின் வளர்ச்சிக்காக பங்களிப்புகளை வழங்கியுள்ளவர். இதற்கு முன்பு வழங்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளான பலரும் அரசியல் கட்சிகளில் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் விக்டோரியா கௌரி நியமனத்தின்போது மட்டும் அவரின் அரசியல் சார்பு நிலையை விமர்சனம் செய்கின்றனர். அவரின் நியமனம் அரசியல் ரீதியாக நடக்கவில்லை. விக்டோரியா குறித்த தகவல்கள் காவல்துறை, உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் தான் கொலிஜீயத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எச்.ராஜா ஆதரவு
இதேபோல் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜாவும் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சத்யமேவ ஜெயதே. வாய்மையே வெல்லும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக திருமதி.விக்டோரியா கௌரி அவர்களின் நியமனத்திற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்த திரு.சந்துரு நீதிபதி ஆனதை ஆட்சேபிக்காத கும்பல் இன்று கதருவது ஏனோ. திரு சந்துரு அவர்கள் இந்த நாட்டின் நிதி அமைச்சர் அவர்களை ஊறுகா அம்மையார் என்று கூறி ஜாதிய வன்மத்தை காட்டியது உலகறியும். திமுக வின் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயலாளர் திரு. ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் நியமிக்கப்பட்டது தவறில்லை என்றால் இதில் என்ன தவறு உள்ளது எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications