Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஒரு நாளைக்கு.. 7 வழக்குகளில் தீர்ப்பு கொடுத்தாரா நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்?” சிபிஎம் கேள்வி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 2017 தொடங்கி தற்போது வரை 1.20 லட்சம் வழக்குகளில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்திருக்கிறார். எனவேதான் அவருக்கு எதிராக திமுக உட்பட இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கிறது என்று பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2017ம் ஆண்டு முதல் 30.11.2025 வரை, 2,138 ரிட் மேல்முறையீடு மனுக்கள், 3,751 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள், 41,920 ரிட் மனுக்கள், 434 ஆள்கொணர்வு மனுக்கள், 540 குற்றவியல் மேல்முறையீடு, 18,392 குற்றவியல் மனுக்கள், 780 குற்றவியல் சீராய்வு மனுக்கள் உட்பட 73,505 பிரதான மனுக்களை விசாரித்துள்ளார். மேலும், 46,921 இதர வகை மனுக்களை விசாரித்துள்ளார். மொத்தம் 1,20,426 வழக்குகளை ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து முடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Madras High Court CPIM Judge

இதை விமர்சித்துள்ள சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், "அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு மக்கள் ஏற்கனவே அறிந்தவை. அதோடு 'பாதாளப் புளுகு' என ஒன்றையும் சேர்த்தாலும், இந்த புளுகை சமப்படுத்த முடியாது போலும்!

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் 28.06.2017 முதல் 30.11.2025 வரை மொத்தம் 1,20,426 வழக்குகளை விசாரித்து முடித்ததாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதை யார் வெளியிட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நீதித்துறை சார்ந்தவர்கள், ஆண்டுக்குச் சராசரியாக 210 நாட்களே நீதிமன்ற வேலை நாட்கள் என்று தெரிவிக்கின்றனர். அப்படியானால், நீதிபதி அவர்கள் தினமும் சராசரியாக ஏழு வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும். இது ஒரு உலக சாதனை என்றே சொல்லலாம் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், இது உண்மையா? அல்லது 'தீபம்' வழக்கிற்காக அவிழ்த்துவிடப்பட்ட புளுகா? என்பதை உயர் நீதிமன்றப் பதிவாளர் தெளிவுபடுத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி விலக வேண்டும் என சிபிஎம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மதச்சார்பின்மை மற்றும் நீதித்துறை மாண்புகளுக்கு எதிராக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் செயல்படுகிறார் என்று சிபிஎம் விமர்சித்து வருகிறது. குறிப்பாக இந்த விவகாரம் குறித்து மக்களவையில் உரையாற்றிய சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன்,

"திருப்பரங்குன்றத்தில் நூற்றாண்டுகளாகப் புண்ணியவான்கள் இங்கே விளக்கேற்றலாம் என்று கல் தூணில் எழுதப்பட்டு, அதிலே விளக்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், நான் புண்ணியவான் அல்ல, அங்கே விளக்கேற்ற மாட்டேன் என்று சொல்லி ஒருவர் அடம் பிடிக்கிறார். உங்கள் தீர்ப்புக்கு முன்னால் நீதி ஒருபோதும் தலைவணங்காது" என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+