தமிழக அரசுடன் மோத வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்... அதை ஆளுநர் கைவிட வேண்டும் -முத்தரசன்
சென்னை: தமிழக அரசுடன் மோத வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், அதை ஆளுநர் உடனடியாக கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கை விவகாரத்தில் எதிர்மறையான போக்கை ஆளுநர் கடைபிடிப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது;

எதிர்மறை நடவடிக்கை
''தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி நேற்று பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். வேந்தர், துணை வேந்தர்களை அழைத்துப் பேசுவது வழக்கமான ஒன்று, எனினும் தமிழ்நாடு ஒருமுகமாக நின்று, எதிர்ப்புத் தெரிவிக்கும் தேசியக் கல்விக் கொள்கையைப் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது எதிர்மறைப் போக்காகும்.''

தமிழகத்தின் தனித்துவம்
''இது மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை வகுக்கும் செயல்பாட்டில் குறுக்கிடுவதாகும். தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டு புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதல்வர் மக்களுக்கு உறுதியளித்துள்ள நிலையில், மக்கள் உணர்வுக்கு எதிராக ஆளுநர் தேசியக் கல்விக் கொள்கையைக் குறுக்கு வழியில் அமல்படுத்த முயற்சிப்பது அமைதியை பாதிக்கும் செயலாகும்.''

இந்திய கம்யூ.
''ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் இருந்தால் அது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையுடன் இசைவாகச் செல்லும் இணக்கமான வழிமுறையை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.''

அறிக்கை
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தனக்கு விளக்க வேண்டும் என ஆளுநர் ரவி தலைமைச் செயலாளர் இறையன்புக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து அந்த கடித்தத்தின் அடிப்படையில், ஒவ்வொரு துறைச் செயலாளர்களுக்கும் திட்டங்களின் விவரங்களை தயாராக வைத்துக்கொள்ளுமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதினார். இது அரசியல் சர்ச்சையாகிய பிறகு தலைமைச் செயலாளர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் நேற்று உயர்க்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் துணை வேந்தர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருக்கிறார் ஆளுநர். இதற்கும் இப்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications