Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மோடி அரசே! வெளியேறு! தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் இ.கம்யூ. தொடர் மறியல் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மோடி அரசே! வெளியேறு என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளதாக அதன் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீஸ் அனுமதி இல்லாமல் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பல இடங்களில் கைது செய்யப்பட்டனர்.

CPI to stage 3 days road roko protest against Union BJP Govt from today

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று முதல் நாளையும் நாளை மறுநாளும் இந்த தொடர் போராட்டத்தை நடத்த உள்ளனர். முன்னதாக இப்போராடம் தொடர்பாக இரா. முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் பெரும் பகுதி மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திட்டக் குழு கலைப்பு, காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு நிலை ரத்து, 'நீட்' தேர்வு மூலம் மருத்துவக் கல்வி மறுப்பு, மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து மத்தியில் குவித்தல், ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் கூட்டாட்சி கோட்பாடுகளை தகர்த்து வருகின்றது.

பன்னாட்டு நிறுவனங்கள்: பெரும் பன்னாட்டு குழும நிறுவனங்களின் லாப வேட்டைக்கு பொதுத்துறை நிறுவனங்களையும், இயற்கை வளங்களையும் பலியிட்டு வருகிறது. கருத்து தெரிவிக்கும் உரிமைகளை மறுத்து, ஏதேச்சதிகார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஒருமைப்பாட்டுக்கு குந்தகம்: வரலாறு காணாத வேலையின்மை, கட்டறுந்து உயர்ந்து வரும் விலைவாசி, வேலை நீக்கம், விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மறுப்பு, விவசாய நிலங்களை பறித்து குழும பண்ணைகள் அமைக்கும் முயற்சி என நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படுத்தும் செயலில் மோடி ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது.

போட்டி அரசாங்கம்: தமிழ்நாடு உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் மாளிகை வழியாக போட்டி அரசு நடத்தி வருவதை இனியும் அனுமதிக்க இயலாது என்ற மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் முறையில் "மோடி அரசே வெளியேறு" என்ற முழக்கத்தை முன்வைத்து நாளை 12.09.2023 முதல் தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுகிறது.

3 நாட்கள் தொடர் மறியல்: வரும் 12, 13, 14 தேதிகளில் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மையங்களில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் பங்கேற்பார்கள். தலைநகர் சென்னையில் வட சென்னை, பீச் ரயில் நிலையம் அருகில் உள்ள தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் எல்ஐசி அலுவலகம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் எம்.பி. கலந்து கொள்கிறார். திருப்பூர் மாநகரம், காட்டன் மார்க்கெட் அருகில் தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியலில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி கலந்து கொள்கிறார். திருவாரூர் தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு கோ.பழனிசாமி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமை ஏற்கிறார். கோட்டூர் தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து எம்.எல்.ஏ. கலந்து கொள்கிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்கின்றார். நாகப்பட்டினம் தபால் நிலையம் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் எம்.பி., கோயமுத்தூர் மாநகரில் மத்திய தந்தி அலுவலகம் முன்பு நடைபெறும் மறியலில் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம் முன்னாள் எம்.எல்.ஏ.வும் பங்கேற்கின்றார்.

ஆதரவு தர வேண்டும்: மாநில உரிமைகள், மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்டத் தலைநகர் உள்ளிட்ட அனைத்து மையங்களிலும் நடைபெறும் தொடர் மறியல் போராட்டத்தை தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாணவர், இளைஞர்கள், பெண்கள், ஜனநாயக சக்திகள் அனைவரும் ஆதரித்து பங்கேற்குமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு இரா. முத்தரசன் அறிக்கையில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+