திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் தொடர முடியாத நிலை உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நடத்திய ஆலோசனையை தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்யப்பட்டது." என சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் மட்டும் விலகிய நிலையில், மற்ற கட்சிகளான விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை திமுக கூட்டணியிலேயே தொடர்வதாகவும் தவெகவுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு எனவும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், இன்று உள்ள சூழ்நிலையில் திமுக கூட்டணியில் சிபிஐ இடம்பெற இயலாது என்று மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் அறிவித்துள்ளார்.

CPI DMK

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "அறிவியல் பூர்வமாக இந்தியாவை வழிநடத்திய நேருவை, பாஜகவினர் வசைபாடுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அதிக நாட்கள் பிரதமராக இருந்த இருந்த மோடியை வாழ்த்துகிறார்கள். ஆனால் நேருவை வசைபாடுகிறார்கள். பின்தங்கிய இந்தியாவை 5 ஆண்டு திட்டத்தின் மூலம் சிறப்பாக வழிநடத்தியவர் நேரு.

கரப்பான் பூச்சி இளைஞர்களின் கோரிக்கையை மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் துவங்க வேண்டும். கடந்த ஆட்சியின் போது ஆளுநர்களின் செயல்பாடுகள் போல இந்த முறை நடக்க கூடாது. சட்டமன்றத்தின் மாண்பை பாதுகாக்க வேண்டும். நமக்கான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தலில் அன்றைய சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி தொடர்பான முடிவை எடுப்போம். கூட்டணி அமைப்பதற்கான சூழல் தற்போது தமிழகத்தில் இல்லை. மக்களின் தீர்ப்புக்கு ஏற்றவாறு தவெகவிற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துள்ளோம். எங்களின் அரசியல் பகை என்றுமே பாஜக, ஆர்.எஸ்.எஸ் உடன் தான். திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகள் ஜனநாயக கட்சிகள். தமிழகத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தவிர்த்து மற்றவர்கள் எங்களுக்கு நட்பு சக்தி தான். தற்போது உள்ள சூழலில் திமுக கூட்டணியில் சிபிஐ இடம் பெறும் சூழல் இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு கூடும். அதில் எந்த ஜனநாயக அணியுடன் சேர வேண்டும் என்பது அப்போதைய சூழல் பொறுத்து முடிவு செய்யப்படும். வர்க்க நலன் சார்ந்து போட்டியிட முடியும். இரு மொழிக் கொள்கையில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருக்க வேண்டும்; மெட்ரோ திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்." எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "பிரதமரை சந்தித்த போது ஏன் சந்தித்தோம், ஏதற்கு சந்தித்தோம் என்பதை முதல்வர் சொல்ல வேண்டும். முதல்வர் ஊடகங்களை சந்தித்து விளக்க வேண்டும். ஊடகம், பத்திரிகைகள் இல்லாமல் எதுவும் இல்லை. நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்கள் எழுப்பும் குரலுக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும்.

100 நாட்கள் வேலை திட்டத்தை மத்திய அரசு கடந்து செல்லக் கூடாது. 18 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டம் தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். மேலும், கடந்த ஆளுநரை போல இந்த ஆளுநரும் செயல்படக்கூடாது. விவசாயிகளின் கடன் முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 5 ஏக்கர் வரை விவசாயிகளின் கடன் முழுமையாக ரத்து செய்ய வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+