மத அடிப்படை.. பாஜக அரசின் கல்விக்கொள்கைக்கு மாற்று! தமிழக அரசு அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு
சென்னை: தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்துவமான மாநிலக் கொள்கையை உருவாக்கும் பணியில் அதற்காக அமைக்கப்பட்ட குழு ஈடுபடும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாலர் கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக்கொள்கை என்ற பெயரில் நாடு முழுவதும் கல்வியில் சனாதன இந்துத்துவ கோட்பாட்டை புகுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறது. இது மட்டுமின்றி பாடப்புத்தகங்களை மாற்றியமைப்பது, சுதந்திரப்போராட்ட வரலாறு உட்பட இந்திய வரலாற்றை மத அடிப்படையில் மாற்றி கற்பிப்பது போன்ற ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு நிலைமைகளுக்கேற்ப தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை உருவாக்கிட நிபுணர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு அமைத்தது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கை பெரும் பாராட்டைப் பெற்றதுடன் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விஞ்ஞான அடிப்படையிலான கல்வி கிடைத்திட நல்ல வாய்ப்பு ஏற்பட்டது.
அமைக்கப்பட்ட உயர்மட்டக்குழு கல்விக்கொள்கை உருவாக்குவதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் குழுவின் செயல்பாடுகள் குறித்து பத்திரிகைகளில் வந்த செய்தி மிகுந்த கவலையளிப்பதாக இருந்தது. அரசின் உயர்ந்த நோக்கம் பாதிக்கப்படுமோ என்ற கேள்விகளும் கல்வியாளர்கள் மத்தியில் எழும்பியது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு மாநில அடிப்படையிலான கல்விக் கொள்கை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க கவனம் செலுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சரைச் சந்தித்து முறையிட்டோம். பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கருத்துக்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு குழுவை சீரமைத்துள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்துவமான மாநிலக் கொள்கையை உருவாக்கும் பணியில் இக்குழு ஈடுபடும் எனவும், குழுவின் அறிக்கை வரப்பெற்றதும் அதில் உள்ள பரிந்துரைகளை அரசு கவனமுடன் பரிசீலித்து தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் மற்றும் நம்மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
இதை வரவேற்பதுடன், விரைவில் அறிக்கையைப் பெற்று அதன் மீது சிறப்பானதொரு கல்விக் கொள்கையை வகுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications