ப்ரியா ராஜன் பேச..பேச..குறுக்கே புகுந்த கம்யூனிஸ்டுகள்..மாநகராட்சி மீட்டிங்கில் திடுக்! என்ன நடந்தது?
சென்னை: நேற்று நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ப்ரியா ராஜன் பேசுவதற்கு கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சென்னையில் தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் வரி மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொழில் வரியை 35% உயர்த்த நேற்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 2018ல் தொழில் வரி உயர்த்தப்பட்ட நிலையில் 5 வருடங்கள் கழித்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது.
தற்போது 35% உயர்த்த மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் மாத வருமானம் ரூ.21,000-க்குள் இருந்தால் தொழில் வரி வசூலிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.21,000 முதல் ரூ.30,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.135ல் இருந்து ரூ.180ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.690ல் இருந்து ரூ.930 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தொழில் வரியை வருமானதாரர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்ப்பு: இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் ப்ரியா ராஜன் பேசுவதற்கு கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கான அறிவிப்பை பிரியா ராஜன் வெளியிடுகையில் அதற்கு சிபிஎம், சிபிஐ கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில்.. வரியை ஏற்ற கூடாது என்று மீண்டும் மீண்டும் கோஷம் போட்டனர். இதனால் மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதம் மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் இந்த வருடம் வரி மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படி 5 வருடத்திற்கு ஒரு முறை வரி உயர்த்தப்படவில்லை என்றால் நாம் கடன் வாங்க வேண்டி இருக்கும்.
வெளியே கடன் வாங்கினால் அதை அடைக்க மீண்டும் மக்கள் மீதே சுமை ஏற்றப்படும். அதை தவிர்க்க குறைந்தபட்ச வரி உயர்வை இப்போது மேற்கொள்வதே சரி என்று மேயர் பிரியா ராஜன் விளக்கம் கொடுத்தார். அதேபோல் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனும் இதே விளக்கத்தை கொடுத்தார். இதன் பிணைப்பே கோஷம் போட்ட கவுன்சிலர்கள் அமைதி ஆனார்கள்.
ஜே. குமரகுருபரன், ஐ.ஏ.எஸ்., நல்ல அனுபவம் கொண்டவர். 2004 ஆம் ஆண்டு அனுபவ இந்திய நிர்வாகப் பணியைச் சேர்ந்தவர். தமிழக அரசின் பல்வேறு முக்கிய பதவிகளில் 19 ஆண்டுகள் பணியாற்றியவர். 19 வருட ஆட்சியில் முதல் 4-5 வருடங்கள் திமுக ஆட்சிக்கு கீழ்தான் இவர் ட்ரெயினிங் எடுத்தார்.
அதன்பின் பல்வேறு துறைகளில் இவர் செயலாளர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக இவர் பதவி ஏற்றுள்ளார். ராதாகிருஷ்ணன் இந்த பதவியில் இருந்து இன்று மாறிய நிலையில் குமரகுருபரன் பதவி மாறி உள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications