ஆர்.எஸ்.எஸ். கொள்கை "மதவாதம்".. மக்களை பிளவுபடுத்த பாஜக முயற்சி.. டி.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு
டி ராஜா பேட்டியில், பிரதமரின் தமிழகம் வருகை மாற்றம் தராது என்று தெரிவித்துள்ளார்
சென்னை: மோடி தலைமையிலான பாஜக ஆட்சி கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்... பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் செயல் திட்டம் மதவெறி அரசியல் மட்டும்தான் என்றும், கல்வியை தனியார் மயமாக்குவதும், வணிக மயமாக்குவதும் தான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம் என்றும் டி.ராஜா அழுத்தந்திருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது டி.ராஜா சொன்னதாவது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் ஜனவரி 26 முதல் 28-ம் தேதி வரை 3 நாட்கள் கோவையில் நடைபெறுகிறது.. அதற்கு பிறகு அகில இந்திய மாநாடு அக்டாபர் 14 முதல் 18-ம் தேதி வரை விஜயவாடாவில் நடக்க உள்ளது..
இந்தியாவில் உள்ள அரசியல் சூழல், மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை மதிப்பீடு செய்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இந்த கூட்டங்களில் விவாதிப்போம்.

ஆர்எஸ்எஸ்
இந்தியாவில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் கொள்கையாக இருப்பதால் அதனை நிறைவேற்ற மதம், ஜாதி, மொழி கலாச்சாரத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்றனர்.. இதை நிறைவேற்றி கொள்வதற்கு பாஜகவை பயன்படுத்துகின்றனர்.. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் மூர்க்கத்தனமாக செயல்பட தொடங்கியுள்ளன. இந்தியாவில் மதவாத ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ்-ன் கொள்கையாக இருப்பதால் அதனை நிறைவேற்ற மதம், சாதி, மொழி காலாச்சாரத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகின்றனர்.

கோவை பள்ளி
இதனை சாதிக்க பாஜகவை பயன்படுத்துகின்றனர். ஆர்எஸ்எஸ்-ன் வழிகாட்டுதலின் பேரில் பாஜக செயல்படுகிறது... கோவையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பல்வேறு பின்னணியை சேர்ந்தவர்களாக உள்ள நிலையில், தனியார் பள்ளியில் 'சாகா' பயிற்சி அளிக்கப்படுகிறது. இது வன்முறையை தூண்டும் பயிற்சியை கொடுக்கிறது.

ஆய்வு
மத்திய அரசின் கொள்கை, நாட்டின் பொருளாதாரத்தை தனரியர் நிறுவனங்களிடம் தாரை வார்ப்பதாக உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, பசி பட்டினியில் உள்ள 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்தில் உள்ளது.. இந்திய நாடாளுமன்றம் செயல்படாத அவையாக உள்ளது.. கூட்டாட்சியின் அரணாக இருக்கும் நாடாளுமன்றம் முடக்கப்படுமானால் ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளப்படுகிறது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்..

வேலையில்லா திண்டாட்டம்
வங்கிகளை தனியாரிடம் ஒப்படைப்போம் என்று சொன்னார்கள்.. இதனால் வங்கி ஊழியர்களும் போராட்டமும் நடத்தினார்கள்.. உழைக்கும் மக்கள் நாட்டின் சுயசார்பை காப்பாற்ற போராடுகிறார்கள்... வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் உள்ள நிலையில் இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் பிரதமரை வரவேற்பது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம்..

2 கட்சிகள்
மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால், மோடியின் வருகையால் தமிழகத்தில் அரசியல் ரீதியிலான மாற்றங்கள் ஏற்படும் என்பதை ஏற்கவில்லை.. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைப்பு குறித்து ஏற்கனவே நாங்கள் பேசி இருக்கிறோம்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதான் முதலில் இதற்கு வேண்டுகோள் விடுத்தது... கூட்டு முயற்சி எடுத்தால் தமிழகத்தில் வாக்கு வங்கி நிச்சயம் உயரும்" என்றார்.












Click it and Unblock the Notifications