"மோசம்".. முந்திக்கிட்ட பாஜக.. சிறுபான்மையினருக்கு எதிராக பேசினவருக்கு நீதிபதி பதவியா: பாலகிருஷ்ணன்

பாஜக விக்டோரியா கௌரி குறித்து சிபிஎம் பாலகிருஷ்ணன் ட்வீட் ஒன்றினை காட்டமாக பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக கருத்து கூறிய பாஜக நிர்வாகியான வழக்கறிஞரான விக்டோரியா கெளரியை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் சார்பாக கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் 5 வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

இந்த லிஸ்ட்டில் உள்ள பெண் வழக்கறிஞரான விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று வழக்கறிஞர்கள் குழு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தது.

 விக்டோரியா கௌரி

விக்டோரியா கௌரி

இதே வழக்கறிஞரை நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவித்து இன்னொரு வழக்கறிஞர் குழு கடிதம் எழுதி இருக்கிறது.. இந்நிலையில், அவரை சென்னை ஹைகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. அதாவது, சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பதவியிடங்களை நிரப்பும் வகையில், குடியரசு தலைவருக்கு கொலிஜியம் வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை பரிந்துரை செய்திருந்தது.. அதில்தான் விக்டோரியா கெளரியும் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.

 கிறிஸ்துவர்கள்

கிறிஸ்துவர்கள்

விக்டோரியா கௌரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்.. 20 வருடங்களாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இப்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இவர் பதவி வகிக்கிறார்.. இவர் பாஜகவின் உறுப்பினராகவும் இருக்கிறார்... அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.. அதனால்தான் இப்போது இவரது புதிய பதவிக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.. காரணம், பாஜக நிர்வாகியாக இருந்துகொண்டு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான கருத்துகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறாராம்..

வைகோ

வைகோ

அதனால், இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்... மற்றொருபுறம் அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை கூறிவருகிறார்கள்.. மதவெறியை தூண்டும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதுடன், சமூக வலைதளங்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நடத்துகின்ற கூட்டங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக இவர்மீது குற்றச்சாட்டும் எழுந்துள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.

பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

அதனால், தமிழக முதல்வர், இந்த விவகாரத்தில் தலையிட்டு, விக்டோரியா கௌரி அவர்களின் நியமனத்தை திரும்பப் பெற, கொலிஜியம் உள்ளிட்ட உரிய அதிகார அமைப்புகளை வலியுறுத்த வேண்டும் என்றும் வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.. அதுபோலவே, சிபிஎம் பாலகிருஷ்ணன் முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.

 வெறுப்பு பேச்சுக்கள்

வெறுப்பு பேச்சுக்கள்

அதில், "இந்திய மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்பை மூட்டும் விதத்தில் கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான பேச்சுக்களை பேசி வந்த பாஜக நிர்வாகி, விக்டோரியா கெளரி அவர்கள் இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமயன நடவடிக்கை நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பாதித்துள்ளது. நீதிபதியாக செயல்படுவோர் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டிருக்கலாம். ஆனால் அரசமைப்பு சட்டத்திற்கே விரோதமாக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர், அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களை காக்க செயல்படுவாரா?

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

கொலீஜியம் முடிவிற்கு எதிராக வழக்கறிஞர்களும், அரசியல் கட்சிகளும் கொந்தளித்தது நியாயமானது. தற்போது உச்ச நீதிமன்றம் இது பற்றிய வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. ஆனால் இந்த நிலையில் பாஜக ஒன்றிய அரசு முந்திக்கொண்டு நியமனத்தை‌ உறுதி செய்துள்ளது. எனவே, பிரச்சனையின் தீவிரத்தை கணக்கில் கொண்டு, உச்சநீதிமன்றம் இந்த நியமனத்தை‌ ரத்துச் செய்து நீதித்துறையின் மாண்பினை பாதுகாக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+