ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் விலை எவ்வளவு குறைந்தது.. மக்கள் கையில் எவ்வளவு பணம் புரள்கிறது – பெ.சண்முகம்
சென்னை: ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்னர் வரி குறைப்பு செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். மக்களுக்கு பிரதமர் தீபாவளி பரிசு வழங்கியுள்ளதாக பாஜகவினர் இதை வரவேற்று வந்தனர். இந்நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பால் எந்தெந்த பொருள்களுக்கு விலை குறைந்துள்ளது. மக்கள் கையில் எவ்வளவு பணம் புரள்கிறது என்று வெளியிடத் தயாரா என்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தீபாவளியை முன்னிட்டு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்தார். மத்திய, மாநில அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு 2 அடுக்குகளாக ஜிஎஸ்டி வரி வரம்பை குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி 12% மற்றும் 28% ஜிஎஸ்டி வரி விகிதங்கள் நீக்கப்பட்டது. இனி 5% மற்றும் 18% என மட்டுமே ஜிஎஸ்டி வரி அடுக்குகள் இருக்கும். சிறப்பு ஜிஎஸ்டி வரியாக ஆடம்பர பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஜிஎஸ்டி வரி குறைப்பு
புதிய திருத்தப்படி தனிநபர் ஆயுள் காப்பீடு, ஹெல்த் இன்சூரன்ஸ், உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி வரியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கல்வி சார்ந்த ஸ்டேஷ்னரி பொருட்களான பென்சில், ஷார்ப்னர், கிரயான்ஸ், நோட்டுப்புத்தகம், ரப்பர், வரைபடங்கள், சார்ட் உள்ளிட்டவைக்கும் ஜிஎஸ்டி வரியில் விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெய், ஷாம்பு, டூத் பேஸ்ட், சோப்பு, ஷேவிங் க்ரீம் உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி நிர்ணயிக்கப்பட்டது. ஏசி, டிவி, கார் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரியும், விவசாய உபகரணங்களுக்கு 5% ஜிஎஸ்டி வரியும் நிர்ணயிக்கப்பட்டது.
சண்முகம் கேள்வி
மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன் மூலம் மக்களின் வரிச்சுமை குறைந்து, வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை மத்திய அரசு மற்றும் பாஜக அதிகளவு வரவேற்றது. வரி குறைப்பால் எந்தெந்த பொருட்களின் விலை எவ்வளவு குறையும் என்று நிறுவனங்கள் சார்பில் விளம்பரமும் செய்யப்பட்டது.
ஜிஎஸ்டியில் மாற்றம் செய்யப்பட்டு சுமார் 15 நாட்களாகிவிட்டது. பாஜக இதை மக்களுக்கான தீபாவளி பரிசு என்று பெரியளவுக்கு புரோமோட் செய்தாலும், எதிர்க்கட்சிகள் இதை விமர்சித்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.
பட்டியல் வெளியிட தயாரா
எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?." என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவரின் பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது பதிவை திமுக கூட்டணியினர் ஆமோதிக்கும் நிலையில், பாஜகவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications