2 மேட்டர்கள்.. இப்படியா தூக்கி பிடிப்பது.. பாஜகவுக்கு எதிராக அதிரடியை அறிவித்த கம்யூனிஸ்ட் கட்சி
இந்தி மொழி திணிப்புக்கு சிபிஎம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது
சென்னை: பாஜக அரசின் இரண்டு நடவடிக்கைகளை கண்டித்து, சிபிஎம் கட்சி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது.. இது தொடர்பாக அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
முக்கிய பிரச்சனைகள் அல்லது புகார்கள் மத்திய அரசை சூழ்ந்துகொள்ளும்போது, ஏதாவது ஒரு சர்ச்சைகள் அவ்வப்போது கிளம்புவது இயல்பு.
அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த பேச்சால், தமிழகம் கடுமையான அதிர்ச்சிக்கும் அதிருப்திக்கும் ஆளானது.

அமித்ஷா பேச்சு
"நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல.. அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9ம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்" என்று அமித்ஷா கூறியிருந்தார்.

கண்டனம்
இதற்குதான் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தையே செய்ய தயாராகிவிட்டது.. இந்தி திணிப்பு மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும் வருகிற ஏப்ரல் 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இணைப்பு மொழி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உள்துறை அமைச்சர் அமித்ஷா, 'இந்தி தான் இந்தியாவின் மொழி', 'இந்தி இணைப்பு மொழியாகும் தருணம் வந்துவிட்டது' என்றுள்ளார். மாநிலங்களுக்குள் இனி கடிதப் போக்குவரத்து இந்தியில்தான் இருக்க வேண்டுமெனவும் முன்மொழிந்துள்ளார். இதன் மூலம் அரசமைப்பு சட்டம் அவமதிக்கப்படுகிறது. அரசியல் சாசனத்தின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்பது நிராகரிக்கப்படுகிறது.

பாஜக
மொழிவாரி மாநிலங்கள் பற்றிய ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தியலும், மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா, பன்மைத்துவமே அடிப்படை என்கிற கூட்டாட்சி கோட்பாடும் சிதைக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் முந்தைய உருவமான ஜனசங்கம் ஆகியவை இந்திய அரசமைப்புச் சட்டம், இந்திய தேசிய கீதம், இந்திய தேசிய கொடி, இந்திய மொழிக்கொள்கை ஆகியவற்றை நிராகரித்தே வந்துள்ளன. இடைக்காலத்தில் இந்தி இறுதியாக சமஸ்கிருதம் என்பதே ஆர்.எஸ்.எஸ்-ன் கோட்பாடு.

அமித்ஷா
ஆர்.எஸ்.எஸ் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தும் முயற்சியே அமித் ஷா-வின் பேச்சு. அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் 8 வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாகவும், தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டும். அந்த நிலை வரும் வரை இரு மொழிக் கொள்கை தான் இருக்கும், இந்தியை திணிக்க முடியாது. எம் மொழியையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு இல்லை.

ஒருமொழி
ஆனால் ஒரு மொழியைத் தூக்கிப் பிடிப்பதற்காக அனைத்து மொழிகளையும் மிதிப்பதற்கு ஒன்றிய அரசு முயற்சித்தால் அதற்கு கிஞ்சித்தும் இடமளிக்க மாட்டோம். ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு எதிராகவும், மத்திய பல்கலை கழகங்களில் நுழைவுத்தேர்வினை புகுத்தி, தனியார் பயிற்சி மைய வணிகத்தை ஊக்குவிப்பதை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏப்.19 ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்!












Click it and Unblock the Notifications