கரும்புள்ளியாக மாறிடும்.. தடதடத்த கூட்டணி கட்சி.. வெடித்து கிளம்பும் 12 மணி நேர வேலை சட்ட திருத்தம்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக மாற்றும் வகையில் சட்டத்திருத்தம் சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த சட்டத்திருத்தம் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள கரும்புள்ளி என்று சிபிஎம் விமர்சித்துள்ளது.

உலகம் முழுவதும் தொழிற் புரட்சி ஏற்பட்ட பின்னர் மனிதர்களின் உழைப்பு அதிகம் தேவைப்பட்டது. ஆனால் ஏறத்தாழ அனைத்து நிறுவனங்களும் லாபத்தை தாண்டி உபரிக்காக மனித உழைப்பை சுரண்ட தொடங்கின. 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் வரை தொழிலாளர்களை கசக்கி பிழிந்தது. இதற்கு எதிராக ஏராளமான போராட்டங்களும், அதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த போராட்டங்களின் விளைவாகதான் தற்போது 8 மணி நேரம் என்பது உலகம் முழுவதும் பொதுவானது. இதைத்தான் நாம் மே தினமாக கொண்டாடி வருகிறோம்.
ஆனாலும் தற்போது வரை 90 சதவிகித நிறுவனங்கள் 8 மணி நேரத்திற்கும் அதிகமாகதான் உழைப்பை கோருகின்றன. இப்படி இருக்கையில் இந்த வேலை நேரத்தை 7 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்து வருகின்றன. இப்படி இருக்கையில், தமிழ்நாடு அரசு இந்த வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திக்கொள்ளலாம் என்று புதிய சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அத்துனை கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது தொடர்பாக பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோதே சிபிஎம் எம்எல்ஏ நாகை மாலி எதிர்த்திருக்கிறார். ஆனால் இன்றைக்கு அதையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே இதனை எதிர்த்து இன்று அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு செய்திருக்கிறது. ஏற்கெனவே இதுபோன்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இப்போது அதே சட்டத்தை ஏன் திமுக அரசு கொண்டு வர வேண்டும்? இது காப்ரேட்களுக்க சேவை செய்வதை போல இருக்கிறது.
இந்தியாவில் முதன் முதலில் மே தின கொண்டாட்டத்தை நடத்தியது தமிழ்நாட்டில்தான் இப்படி இருக்கையில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. எட்டு மணி நேர வேலை பாட்டாளிகளின் அடிப்படை உரிமை அந்த உரிமையை பறிப்பவர்கள் எவராக இருந்தாலும் வரலாற்றில் பாட்டாளிகளின் விரோதிகளாகவே அவர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள். வேலை நேரம் உயர்தப்பட்டால் அது திமுகவின் வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாகவே இருக்கும். உங்கள் தந்தை உங்களுக்கு வைத்த பெயருக்காவது நியாயம் சேருங்கள் தொழிலாளர்களின் துரோகியாக வரலாற்றில் இடம் பிடித்துவிடாதீர்கள் ஸ்டாலின்" என்று கூறியுள்ளார்.
8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு என்பதுதான் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்று தொழிற்சங்கங்கள் மட்டுமல்லாது மனித உரிமை ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். இந்த சமநிலை தவறும் பட்சத்தில் அதாவது வேலை நேரம் கூடும்பட்சத்தில் அது வேலையின்மையை அதிகரிக்கும். ஏற்கெனவே இந்தியா வேலையில்லா திண்டாட்டத்தில் உழன்றுக்கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் 12 மணி நேர வேலையை அறிவித்தால் அதற்கு எதிராக தொடர் போராட்டங்களும் நடைபெறும் என்று ஏற்கெனவே தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
பினராயி விஜயன் வீட்டில் ED ரெய்டு.. காங்கிரஸ், பாஜகவை ஒரே ட்வீட்டில் விளாசிய ஸ்டாலின்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications