4 வருஷம் ஆச்சு! தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுங்க! சிபிஎம் புதிய செயலாளரும் திமுக அரசு மீது அட்டாக்
சென்னை: ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், தேர்தல் சமயத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தி உள்ளது. மேலும் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக நேற்று முன் தினம் பெ சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கவனம் செலுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் இந்த அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றும் கூறியுள்ளது.

குறிப்பாக, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வுகளால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். சிறு-குறு தொழில் முனைவோர்கள் மத்தியில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ள மின்சார நிலைக்கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.
நீதிமன்ற தீர்ப்புகளை காரணம் காட்டி ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.
கோவில் நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த அறிவிப்புகள் ஏதும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தமிழக அரசு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிபிஎம் முன்னாள் செயலாளர் கே பாலகிருஷ்ணன், அண்மையில் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சியில் மக்களுக்காக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை தடையின்றி செயல்படுத்த வேண்டும். ஆனால், கிராமத்தில் பட்டா கேட்டு சிறு இயக்கம் நடத்தினாலும், தெருமுனை கூட்டம் என்றாலும், போலீஸ் தடை போட்டு வழக்கு போடுகிறது.
முதல்வரை இந்த மாநாட்டின் வாயிலாகக் கேட்கிறேன். தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளீர்களா?" என காட்டமாக பேசினார். பாலகிருஷ்ணனின் இந்த பேச்சை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியும் விமர்சித்து இருந்தது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில செயலாளரும் திமுக அரசை விமர்சித்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications