சென்னை- கொல்லம் ரயில் பெட்டியில் விரிசல்..துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள்-பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சென்னை: சென்னை - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டியில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயில்வே அதிகாரிகள் அந்த பெட்டியை கழற்றி விட்டனர். உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது பற்றிய முழு விவரத்தை இங்கே பார்ப்போம்.
மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் பெங்களூரு - கொல்கத்தா சென்ற ஹவ்ரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மொத்தம் 3 ரயில்கள் கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கியது. அதிவேக வேகத்தில் வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயில் பெட்டிகள் பறந்தன. தண்டவாளத்தில் ஒன்றின் மீது ஒன்றாக ரயில் பெட்டிகள் ஊடுருவி சின்னாபின்னமாகி கிடந்தது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தின் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே இந்த விபத்து நடைபெற்றது. போர்க்களம் போல அந்த இடமே ரத்தமும் சதையுமாக காட்சி அளித்தது.
இந்த பயங்கர விபத்தில் 275 பயணிகள் உயிரிழந்ததாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் காயம் அடைந்தனர். நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்பட எதிர்க்கட்சிகள் அஸ்வினி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி வருகின்றன. எனினும் ரயில் விபத்துக்குள்ளானதற்கு தொழில் நுட்ப கோளாறே காரணம் என்றும் காரணமானவர்களை கண்டுபிடித்து விட்டதாகவும் கூறிய அமைச்சர், அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல எனக் கூறி ராஜினாமா கோரிக்கையை நிராகரித்து விட்டார்.
இதனிடையே, ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் முழுவதுமாக முடிந்துள்ள நிலையில், தற்போது மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. போர்க்கால அடிப்படையில் நடைபெறும் இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒடிசா ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பாதுகாப்பான பயணமாக ரயில் பயணமே கருதப்படும் நிலையில், நாங்கள் எதை நம்பி பயணிப்பது என பயணிகளும் ஆதங்கத்துடன் கூறி வருகின்றனர். இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே அமைத்துள்ள உயர்மட்ட விசாரணைக்குழு அறிக்கை கொடுத்த பிறகே அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.
இதனிடையே, கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி, மதுரை வழியாக சென்னைக்கு இயக்கப்படும் கொல்லம் எக்ஸ்பிரஸ்(16102) ரயிலின் எஸ் 3 பெட்டியின் அடிப்பகுதியில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இந்த ரயில் பெட்டியை செங்கோட்டையில் அதிகாரிகள் கழற்றிவிட்டனர். உரிய நேரத்தில் ரயில் பெட்டி கழற்றி விடப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மதுரையில் கழற்றிவிடப்பட்ட எஸ். 3 கோச்சிற்கு பதிலாக வேறு பெட்டி இணைக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications