தனிமையில் தேவி.. நடுவீட்டில் வந்து உட்கார்ந்த "ரோமியோ".. குறுக்கே பரிதாப "தோழி".. அலறிய அரும்பாக்கம்
தோழி உட்பட 2 பெண்களை கத்தியால் குத்திய இளைஞர் கைதாகி உள்ளார்
சென்னை: ஒரு பெண் தனியாக வாழ்வது என்பது, இன்றுவரை சாத்தியமில்லாமல் இருக்கிறது.. அதிலும் கணவரை இழந்த சில இளம்பெண்களுக்கு, அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும், பாலியல் தொல்லைகளும் அடுக்கடுக்காக வந்துசேர்வது தொடர்கதையாகிவிட்டது.. சென்னையிலும் ஒரு அபலை சிக்கி உள்ளார்.
அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 30 வயதாகிறது.. இவருக்கு கல்யாணம் ஆகி 11 வருடங்கள் ஆகிறது.. ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்.
ஆனால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து விட்டார்.. கல்யாணம் ஆகி 3 வருடங்கள்தான் இவர்கள் ஒன்றாக வாழ்ந்திருக்கிறார்.. 8 வருடங்களுக்கு முன்பாகவே, குழந்தைகளுடன் வெளியேறி வந்துவிட்ட தேவி, தனியாகவே வசித்து வருகிறார்.

கண்ணீர் தேவி
இவர் குடியிருக்கும் பகுதியிலேயே கன்னியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார்.. இவருக்கு 28 வயதாகிறது.. 2 வருடம் முன்புதான் கன்னியப்பனுடன் தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது... ஆரம்பத்தில் சாதாரணமாக பேசி கொண்டிருந்த கன்னியப்பன் பேச்சில் நாளடைவில் மாற்றம் தென்பட்டது.. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தேவியை, கன்னியப்பன் கேட்டுள்ளார்.. அதற்கு தேவி மறுத்துள்ளார்.. எனினும், விடாமல் தேவியை டார்ச்சர் செய்து வந்தபடியே இருந்துள்ளார்..

தேவி பயம்
தேவி திருமணத்துக்கு மறுப்பு சொல்லவும், ஒருகட்டத்தில் அவரை அடித்து சித்ரவதை செய்ய தொடங்கினார் கன்னியப்பன்.. தன்னை திருமணம் செய்து கொண்டே ஆக வேண்டும் என்றும் மிரட்டி உள்ளார். இதனால், பயந்துபோன தேவி, அண்ணாநகர் மகளிர் போலீசில் சென்று புகார் அளித்தார். அந்த புகாரில், "கன்னியப்பன் என்பவர் தினமும் என்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வீட்டிற்கு வந்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்கிறார். இனிமேல் என்னை தொந்தரவு செய்யக்கூடாது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்..

கம்ப்ளைண்ட்
மகளிர் போலீசும், இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்தனர்.. ஆனால், எந்த நடவடிக்கையும் கன்னியப்பன் மீது எடுக்கவில்லையாம்.. அவரை கூப்பிட்டு விசாரிக்கவும் இல்லையாம். இதனால், அதிருப்தியும், வருத்தமும் அடைந்த தேவி, பலமுறை அண்ணா நகர் மகளிர் போலீசுக்கு சென்று, தன்னுடைய புகார் என்ன ஆச்சு? என்று கேட்டுள்ளார். அதற்கு போலீசாரும், ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது... இந்நிலையில், நேற்று முன்தினமும், தேவியின் வீட்டிற்குள் சென்றார் கன்னியப்பன்.. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மறுபடியும் தகராறு செய்துள்ளார்.

குறுக்கே தோழி
திருமணம் செய்ய என்னால் முடியாது என்று தேவி சொன்னதுமே ஆத்திரமடைந்த கன்னியப்பன், அவரை சரமாரியாக தாக்கினார்.. அதனால் வலி பொறுக்க முடியாமல் தேவி அலறினார்.. அப்போதும் ஆவேசம் அடங்காத கன்னியப்பன், மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவியை குத்த முயன்றிருக்கிறார்.. அதற்குள் தேவியின் தோழி ஓடி வந்து தடுக்க முயன்றுள்ளார்.. ஆனால், அந்த தோழியை சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி விட்டார் கன்னியப்பன். இரு பெண்களும் கதறி துடிக்க, அந்த அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் ஓடிவந்தனர்..

தோழி சீரியஸ்
ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பெண்களையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்... இதுகுறித்து அரசு மருத்துவமனையில் இருந்து அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்து தேவியிடம் விசாரணை செய்தனர்... அதற்கு பிறகு, போலீசார் தேவியிடம் இன்னொரு புகாரை பெற்று, வழக்கு பதிவு செய்து, கன்னியப்பனையும் கைது செய்துள்ளனர்.. அவர் இப்போது புழலில் உள்ளார்.. இரு பெண்களும் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications